Type to search

Headlines

யாழில் மீண்டும் டெங்குத் தாக்கம் 6 பேர் யாழ்.போதனாவில் அனுமதி

Share

யாழ்.மாவட்டத்தில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து கடந்த வாரத்தில் 6 பேர் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூரத்தி சற்று முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு,

கடந்த 17ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரையான ஒரு வாரகாலத்தில் யாழ் மாவட்டத்திற்குட்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 6 பேர் டெங்கு காய்ச்சல் தொற்றால் பீடிக்கப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருமாக ஆறு பேர் இவ்வாறு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link