Type to search

Headlines

யாழில் மீண்டும் கொரோனா என யாரும் பீதியடைய வேண்டாம்

Share

யாழ்ப்பாணத்தில் மீண்டும் கோரோனோ வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என யாரும் பீதியடைய தேவையில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வெலிக்கந்தை சிகிச்சைநிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் வீடு திரும்பிய ஐவருக்கு நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி. ஆர். பரிசோதனையில் நேர்மறை (பொசிட்டீவ்) என அறிக்கை வந்துள்ளது.

எனினும் அது இறந்த வைரஸாக இருக்கலாம் என்றே நம்புறோம்.இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கும் அறிவித்தல் வழங்கியுள்ளோம்.

அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய ஐவரயை யும் குடும்பத்துடன் அவர்களது வீடுகளில் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தியுள்ளோம்.

ஐந்து பேருக்கும் 14 நாட்களின் பின்னர் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை மேற் கொள்ளப்படும் . எனவே இதுதொடர்பில் யாழ். மக்கள் அச்சமடையத் தேவையில்லை.
ஏனெனில் இவ்வாறான சம்பவங்கள் உலக நாடுகளில் கோவிட் – 19 தொற்றுக் குள்ளானவர்களுக்கும் தொற்றிலிருந்து மீண்ட பின்னரும் பரிசோதனையில் தொற்று என கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இனங்காணப்பட்டவர்களை தனிமைப்படுத்தி உள்ளோம். இது தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை,

ஆனாலும் சுகாதார விதிகளை பின்பற்றி ஒவ்வொருவரும் தங்களது பாதுகாப்பை உறு திப்படுத்தி தம்மை நோயில் இருந்து காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய கொரோனா தொற்று நோயினை இல்லாதொழிக்க நீண்டகாலம் செல்லும்.

எனவே மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தமது வாழ்க்கையை கொண்டு செல்வதன் மூலமே கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link