Type to search

Headlines

முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடு புத்தரின் போதனைக்கு எதிரானது

Share

நாட்டில் முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராகப் பரவலாக அரங்கேற்றப்படுகின்ற இனவாத செயற்பாடுகள் மிகவும் அருவருக்கத்தக்கவை என்பதுடன், கௌதம புத்தரின் உன்னத போதனைகளுக்கும் முரணானவை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ சாடியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது உத்தி யோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது,

எமது சமூகத்தில் தொடக்க நிலையிலுள்ள இனவாதமானது எமது தாய் நாட்டின் மக்கள் மத்தியில் இன, மத, சமூகப் பிரிவினைகளை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

இது எமது தேசிய நலனுக்கு எதிரானதும் அதற்குக் குந்தகம் விளைவிப்பதும் ஆகும்.

மனிதத் தன்மைக்கும் உயர் மனித விழுமியங்களுக்கும் கூட அது எதிரானது.

எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராகப் பரவலாக அரங்கேற்றப்படுகின்ற இனவாத செயற்பாடுகள் அருவருக்கத்தக்கவை. நம் அனைவராலும் எதிர்க்கப்பட வேண்டியவை.

இத்தகைய வெறுக்கத்தக்க செயற்பாடுகள் கௌதம புத்தரின் உன்னத போதனை களுக்கும் முரணானவையாகும்.

ஆசீர்வதிக் கப்பட்ட அந்தப் போதனைகளுக்குத் தவறான அர்த்தம் கற்பிப்பதற்கு எடுக்கப்படும் எந்த முயற்சியும் அவற்றுக்கு எதிரான குற்றமாகவும் தேசத்துரோகமாகவுமே அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link