Type to search

Headlines

முடி திருத்த மட்டுமே அனுமதி தாடி ஒதுக்குவதற்கு தடை

Share

சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்
களை மீண்டும் திறக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாகாண மற்றும் மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர்களுக்கு பணித்துள் ளார்.

இதுதொடர்பில் சுகாதார அமைச்சின் உதவிப் பணிப்பாளர் நாயகம் லக்ஸ்மன் கம்லத் தெரிவித்ததாவது,

அழகு நிலையங்கள் மற்றும் சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கு உரிய நடை முறைகளைப் பின்பற்ற சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களின் படி, சிகை அலங்கரிப்பு நிலையங்களில் முடி திருத்தத்துக்கு மட்டுமே அனுமதியளிக்கப் பட்டுள்ளது. தாடி மற்றும் மீசை திருத்தம் செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம், சேவையைப் பெறுபவரின் வாயைத் தொட முடியாது என்பதாகும். அத்தோடு சேவை வழங்குநருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையிலான சேவை பெறும் நேரம் குறுகியதாக இருக்க வேண்டும்.

சேவை வழங்குநர் N95 வகை முகக்கவசத்தை அணிந்து கொள்ள வேண்டும். திறப்பதற்கு முன்பும், மூடப்பட்ட பின்னரும் அழகு நிலையங்களை கிருமி நீக்கம் செய்யப்படுவது கட்டாயமாகும்.

மேலும் வரவேற்பறைகளில் கழிவுகளை சேகரித்து பின்னர் அவற்றை அழிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

சிகை அலங்கரிப்பு நிலையத்தின் நுழைவாயிலில் கைகழுவுதற்கு ஓடும் நீர் குழாய் அமைக்கப்படவும் பரிந்துரைக்கப்படுகிறது.

தொழிலாளர்களின் உடல் வெப்பநிலையை தினமும் கண்காணிக்க மற்றொரு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு முன் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியிடம் அனுமதி கோரப்பட வேண்டும்.

அதன்படி வளாகங்கள் பரிசோதிக்கப்படும், பின்னர் அவை அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு நிலைமைகளையும் கடைபிடிப்பதாகக் கண்டறியப்பட்டால், அப் போதுதான் அழகு நிலையங்களைத் திறக்க சான்றிதழ் வழங்கப்படும் என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link