மாவீரர்களின் நாள் இன்று
Share
தமிழ் இனத்தின் விடிவுக்காக களமாடி மாய்ந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் இன்றாகும்.
சந்தனபேழைகளில் உறங்கும் மாவீரர்களை நினைவுகூர்ந்து இன்று மாலை 6.07 மணியளவில் தாயகத்தில் தமிழ் மக்கள் தத்தமது வீடுகளில் ஈகைச்சுடர்களை ஏற்றி அஞ்சலிப்பர்.
தமிழ் மக்களின் உரிமைக்காகவும் விடியலுக்காகவும் அரசாங்கத்துடன் போரிட்டு உயிரிழந்த போராளிகளை நினைவுகூரும் இந்த நாளில், இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங் களில் அமைந் துள்ள மாவீரர் துயி லும் இல்லங்கள் அனைத்தும் சிவப்பு மஞ்சள் கொடி கள் கட்டப்பட்டு பெரும் எடுப்பில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
பொதுவாக மாலை 6 மணி 5 நிமிடத்திற்கு அக வணக்கதுடன் மாவீரர் தின அஞ் சலி நிகழ்வு ஆரம்பமாகும்.
எனினும் அந்த வாரம் முழுவதும் அதாவது 21ஆம் திகதி முதல் 27 வரை ஆங்காங்கே நினைவேந்தல்கள் இடம்பெறும்.
விடுதலைப் புலி கள் அமைப்பிலி ருந்து உயிர்நீத்த முதல் போராளி லெப்டினன்ட் சங்கர் என அழைக்கப் படும் சத்தியநாதன் வீரச் சாவடைந்த நவம்பர் 27ஆம் திகதியே மாவீரர் நாளாக பிரகடனப் படுத்தப்பட்டது.
தமிழீழ விடு தலைப் புலிகள் இயக்கத்திலிருந்து உயிர் நீத்தவர் களின் உடல்கள் எந்த சந்தர்ப்பத் திலும் எதிர்த் தரப்பின் கைகளில் அகப்பட்டு விடக்கூடாது என்பதோடு, உயிர் நீத்தவர் களை முழுமையான இராணுவ மரியாதைகளுடன் புதைப்பதோடு, அவர் களுக்கு அஞ்சலி செலுத்துவது என புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து ஒரு நடைமுறையை பேணி வந்தது.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் மாவீரர் நாளை கடைப்பிடிப்பதற்கு தாயகத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
எனினும் ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர் மாவீரர் நாளை அனுஷ்டிக்க கொரோனா மற்றும் பயங் கரவாத சட்டத்தை காரணம் காட்டி நீதிமன் றம் ஊடாக தடை விதித்துள்ளது.
எனினும் பொதுமக்கள் தத்தமது வீடு களில் சுடரேற்றி அஞ்சலி செலுத்துமாறு தமிழ்க் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.