மாணவர்கள், பொலிஸார் இடையே முரண்பாடு
Share
யாழ்.பல்கலைக்கழகத்துக்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்களிற்கும் பொலி ஸாருக்குமிடையில் நேற்று முரண்பாடான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தது.
யாழ்.பல்கலைகழக நுழைவாயிலில் நேற்று மதியம் கூடியிருந்த மாணவர் களை பல்கலைக்கழகத்திற்குள் உள்ளே நுழையும்படி பொலிஸார் அவர்களை அறி வுறுத்தியுள்ளனர்.
எனினும், மாணவர்கள் அதை மறுத்த போது, மாணவர்களை மிரட்டும் வகை யில் பெருமளவு பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
நேற்று பல்கலைக்கழகத்தில் மாணவர் கள் அஞ்சலி நிகழ்வை மேற்கொள்வார் கள் என்ற எதிர்பார்ப்பில் பொலிஸார் பல் கலைக்கழக நுழைவாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் கறுப்பு உடையணிந்த மாணவர்கள் நேற்று பகல் பல்கலைக் கழக நுழைவாயிலில் ஒன்றுகூடியிருந்தனர்.
இதன்போது அங்கு குவிந்த பொலிஸார் மாணவர்களை பல்கலைக்கழகத்திற்குள் உள்ளே செல்லுமாறு பணித்துள்ளனர்.
எனினும், மாணவர்கள் அதை நிரா கரித்தனர். இதனால், மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டு, அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உதவிக்கு இராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இதனையறிந்து அங்கு விரைந்த சட்டத்தரணி சுகாஷ் இரு தரப்பினருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
இதனையடுத்து அவ்விடத்தை விட்டு பொலிஸார் சென்றதனையடுத்து மாண வர்களும் கலைந்து சென்றனர்.