மக்களுக்கு ஒரு மாபெரும் சக்தியாக மகிந்த விளங்கினார்
Share
மக்களுக்கு ஒரு மாபெரும் சக்தியாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ விளங்கினார் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புகழாரம் சூட்டியுள்ளார்.
அரசியலில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரா.சம்பந்தனால் அனுப்பி வைத்த செய்திக் குறிப்பு எவ்வித மாற்றங்களும் இன்றி அப்படியே தரப்படுகின்றது.
மகிந்த ராஜபக்ஷ தனது அரசியல் வாழ்க்கையில் ஐம்பது ஆண்டுகளைப் பூர்த்திசெய்துள்ளமை தொடர்பாக அவருக்குப் பாராட்டுத் தெரிவிப்பதோடு, எனது உளமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் நான் மிக்க மகிழ்ச்சி யடைகிறேன்.
இக்காலப் பகுதியில் அவர் ஓர் அரசியல்வாதியாக, ஒரு பாராளுமன்ற உறுப்பினராக, ஓர் அமைச் சராக, எதிர்க்கட்சித் தலைவராக, பிரதம மந்திரியாக, நாட்டின் ஜனாதிபதியாக சாத்தியமான ஒவ்வொரு பதவியிலும் இலங்கைக்குச் சேவையாற்றியுள்ளார்.
தான் வகித்த இவ் வொவ்வொரு பதவியிலும் அவர் தனிச் சிறப்புடன் விளங்கியதோடு, நாட்டுமக்களின் அன்பையும் நம் பிக்கையையும் வென்றெடுத்தார்.
அவர் அடிப்படையில் தன்னை நம்பிய, தன்னால் வழிநடத்தப்படு வதற்கு விரும்பிய சாதாரண மக் களின் ஒரு தலைவராகத் திகழ்ந்தார்.
தான் வகித்த பதவிகளிலெல் லாம் அவர் அடிப்படையில் மக்களின் ஒரு நாயகனாகவே திகழ்ந் தார். மக்கள் அவரை மதித்தார்கள்;;; அவர் மக்களை மதித்தார். அவர் மக்களுக்கு ஒரு மாபெரும் சக்தியாக விளங்கினார். மறுபுறத்தில் மக்களே அவரது பெரும் சக்தியின் மூலமாக விளங்கினர்.
இதுவே எந்தவொரு அரசியல் தலைவரினதும் பலம்மிக்க பண்பாகும். மகிந்த ராஜபக்ஷவிடம் இப்பண்பு மிகப்பெருமளவில் நிறைந்து காணப்பட்டது. அதுவே அவரது அரசியல் வெற்றிக்குத் திறவுகோலாகத்திகழ்ந்தது. இது ஏற்றுக் கொள்ளப்படவேண்டிய ஒன்று.
இலங்கை மக்களின் சார்பாக, குறிப்பாக பாராளுமன்றத்தில் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களின் சார்பாக அவருக்கு எமது உளமார்ந்த வாழ்த்துக்களையும் வெற்றிகரமானதோர் அரசியல் எதிர்காலத்திற்கான எமது நல்வாழ்த்துக்களையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு நாடு என்ற வகையில் இலங்கை தீர்க்கப்படாத பாரதூரமான பல பிரச்சினைகளை எதிர் நோக்கியுள்ளது. நாட்டின் அதி உன்னத சட்டமாக அமையும் புதியதோர் அரசியலமைப்பு நாட்டிற்கு மிக முக்கியமாகத் தேவைப்படுகிறது.
நீண்டகாலமாக மக்கள் சிந்தனையிலிருந்து வரும் மாற்றங்களை உள்ளடக்கி புதியதோர் அரசியலமைப்பை உருவாக்குவதற்கு இலங்கை மக்கள் கடந்த பல தசாப்தங்களாக தமது தேசிய ஜனநாயகத் தீர்ப்புகளில் ஆணை வழங்கியுள்ளனர்.
அது குறித்து பெருமளவு கருத்தொருமைப்பாடும் நிலவுகிறது.
இவ் அவசரமானதும் கட்டாய மானதுமான தேவையை நிறை வேற்றுவதற்கு மக்கள் ஆதரவு பெற்ற ஒரு பலமிக்க தலைவர் தேவை.
சந்தேகத்திற்கிடமின்றி மகிந்த ராஜபக்ஷ அந்தநிலையில் இருக்கிறார். அந்தப் பணியை ஏற்று நிறைவேற்றுவதன் மூலம் ராஜபக்ஷ மேலும் பாரிய உச்சத்திற்கு உயர்ந்தெழ வேண்டும்.
அது அவரை ஒரு சிறந்த இராஜதந்திரி என்ற மட்டத்திற்கு உயர்த்துவதோடு, அவருக்கு வெறுமனே தேசிய அங்கீகாரத்தை மாத்திரமின்றி சர்வதேச அங்கீகாரத்தையும் மதிப்பையும் வழங்கும். இந்த விடயத்தில் எமது முழுமையான ஆதரவு அவருக்கு உண்டு.
நீதி,சமத்துவம் மற்றும் கௌர வம் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்மையானதும் நிரந்தரமானது மான ஒரு தீர்வினைக் கொண்டு வந்த ஒரு தலைவராக அவர் இலங்கை வரலாற்றில் தனக்கென ஓர் இடத்தைப் பெறுவார்.
மகிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது உள மார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.