பஸ்களில் அதிகளவு பயணிகள்!
Share
சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழி முறைகளைக் கடைப்பிடிக்காமல், அதிகளவு பயணிகளை ஏற்றிச் சென்ற அனைத்து பஸ் சாரதிகள், நடத்துநர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டு மாறு போக்குவரத்து அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் மகிந்த அமரவீரவால் அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்னவுக்கு, இது குறித்து பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியவற்றால் வழங்கப்பட்ட வழிமுறை களைப் பின்பற்றாது, அளவுக்க திகமான பிரயாணிகளை தனியார் பஸ்களில் ஏற்றிச் சென்றதாக, தனக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் இது குறித்து புகைப்படங்கள், காணொளிகள் தனக்கு கிடைக்கப்பெற்றுள்ள தாகவும் அமைச்சர் கூறினார்.
இவ்வாறு நடந்துகொண்ட பஸ்களை இனங்காணப்பட்ட விசாரணைகள் மேற்கொள்ளப் பட்ட பின்னர், குறித்த பஸ்களின் வீதி போக்குவரத்துக்கான அனுமதி ரத்து செய்யப்படவுள்ளதாகவும் அதற்கு முன்னர், அறிவுரைகளைப் பின்பற்றாமல் சேவையில் ஈடுபடும் பஸ் நடத்துநர்கள், சாரதிகளை கைது செய்வதற்கு, பொலிஸார் உள்ளிட்ட இராணுவத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.