படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு
Share
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பப் பெண் விபத்துக்குள்ளாகி படுகாய மடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த பிரதீபன் சதீனா (வயது – 38) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்தவராவார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தெல்லிப்பழைப் பகுதியில் வசித்து வந்த குறித்த பெண் யாழ்ப்பாணத்தில் இருந்து தனது வீடு நோக்கி கடந்த 21ம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
இதன்போது திடீரென பிரேக் பிடித்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே வீழ்ந்துள்ளார். அத்துடன் அவர் அணிந்திருந்த தலைக்கவசம் கழன்று வீழ்ந்துள்ளது.
இதனால் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத் தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுக் காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை யின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.