Type to search

Headlines

நோய் அடையாளம் காட்டாதவர்கள் சமூகத்தில் நடமாட வாய்ப்புள்ளது

Share

கோவிட் -19 வைரஸ் சமூக பரவலாக இல்லை என்பதற்காக நாட்டில் முழுமையாக கோவிட் – 19 தொற்றாளர்கள் இல்லை என்ற அர்த்தம் கொள்ளமுடியாது.

எங்காவது ஒரு சிலர் எமது பரிசோதனைகளில் இருந்து விடுபட்டு நோய் அறிகுறிகள் காட்டப்படாது சமூகத்தில் நடமாடவாய்ப்புகள் உள்ளது என்கிறது தொற்று நோய் தடுப்புப்பிரிவு.தொற்றுநோய் தடுப்புப்பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர இது குறித்து கூறுகையில்,

கோவிட்-19 வைரஸ் தொற்று நோய்ப் பரவல் இலங்கைக்கு பாரிய அளவில் தாக்கங்களை செலுத்தா விட்டாலும் கூட மீண்டும் மீண்டும் தொற்றுநோய் பரவக்கூடிய வாய்ப்பு கள் அதிகமாகவே உள்ளது.

விமான நிலையங்கள் மீள திறக்கப்படும் பட்சமே மீண்டும் எவ்வாறான தாக்கங்களுக்கு முகங் கொடுக்க வேண்டி வரும் என்பது தெரிய வரும். சமூகத்தில் நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இப்போது வரையில் கடற்படை யினர் மட்டுமே கோவிட்-19 தொற்று நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

அவர் களைத் தவிர்ந்து வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மட்டுமே நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். பொதுமக்கள் எவரும் நோய் தாக்கத்திற்கு உள்ளாகவில்லை.

ஆகவே இலங்கையில் நோய் தாக்கமானது எவ்வாறான தன்மையில் உள்ளது, எந்த திசையில் பயணிக்கின்றோம் என்பதெல்லாம் இதன் மூலமாக அறிந்துகொள்ள முடிகின்றது. பொதுமக்கள் பாதிக் கப்படவில்லை, சமூகப் பரவல் இல்லை என்பதற்காக நாட்டில் முழுமையாக கோவிட்-19 தொற்றா ளர்கள் இல்லை என்ற அர்த்தம் கொள்ள முடியாது.

எங்காவது ஒரு சிலர் எமது பரிசோதனைகளில் இருந்து விடுபட்டு நோய் அறிகுறிகள் காட்டப்படாது சமூகத்தில் நடமாடி வரலாம். ஆகவேதான் சமூக இடை வெளியை தொடர்ந்து கையாள வேண்டும் எனவும், அனாவசிய செயற்பாடுகளையும் தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றோம்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்தும் அச்சுறுத்தல் உள்ளது.

இப்போது இவ்விரு மாவட்டங்களும் ஊரடங்கு சட்டத்தின் கீழ் இருக்கின்ற போதிலும் மக்களின் செயற்பாடு கள் வழமையாகவே உள்ளது.

எனவே மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும். நாட்டில் மீண்டும் வைரஸ் தொற்று நோய் உருவாக இடமளிக்காத வகையில் மக்களே செயற்பட வேண்டும் என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link