தமிழர்களுக்கு தீர்வு கிடைப்பதை கோட்டா வினால் தடுக்க முடியாது
Share
எமது உரிமைகளை நாம் பெற்றுக்கொள்வதை யாராலும் தடுக்க முடியாது. ஜனாதிபதி கோட்டாபய வினாலும் தடுக்க முடியாது.
ஆயுதப் போராட்டம் பழைய கதை. அதைப்பற்றி பேசி பலனில்லை. இப்போது நாம் ஜனநாயகத்தின் அடிப்படையில், மனித உரிமைகளின் அடிப்படையில் பயணிக்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று தனியார் வானொலி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.ஏ.சுமந்திரனின் கட்டுப்பாட்டில் வந்து விட்டது என்ற கருத்தையும் நிராகரித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
உண்மையின் அடிப்படையில், நீதியின் அடிப்படையில், சமத்துவத்தின் அடிப்படையில் எமக்கு தீர்வு கிடைப்பதை எவராலும் தடுக்க முடியாது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினாலும் தடுக்க முடி யாது. வடக்கு கிழக்கு எமது சரித்திர பூமி. அது எமது அடிப்படை உரிமை. அந்த நியாயமான தீர்வை அடைவதை யாராலும் தடுக்க முடி யாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றிய கேள்விக்கு,
ஆயுதப் போராட்டம் முடிந்த பின்னர் நாம் எல்லோரும் ஒன் றாக செயற்பட சில கருமங்கள் எடுத்தோம். அதன்படி, ஒற்றுமை யாக ஒரு அமைப்பை எடுத்தோம். அந்த செயற்பாட்டை இன்றுவரை தொடர்ந்து வருகிறோம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் எமது அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்த விரும் பினார்கள். அதை நாம் வரவேற் றோம். 2009 ஆயுதப் போராட்டம் மௌனமாகிய பின்னரும், அது தொடர்கிறது. இலக்கை அடையும் வரை தொடர்வோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் பழைய கதை. அதைப் பற்றி பேசிப் பலனில்லை. அது முடிந்த விடயம். நாம் இன்று வேறு வழியில் பயணிக்கிறோம். மனித உரிமைகளின் அடிப்படை யில், ஜனநாயகத்தின் அடிப்படையில், சர்வதேசத்தின் ஆதரவுடன் பயணத்தை செய்கிறோம்.
ஆயுதப் போராட்டம் குறித்த கருத்து பற்றிய கேள்விக்கு,
ஆயுதப் போராட்டத்தின் சரி பிழைகளை நாம் பேசவில்லை. இன்னொரு ஆயுதப் போராட் டத்தை நாம் விரும்பவில்லை. சிங்கள, தமிழ் மக்களிற்கு ஆபத்தை விளைவிக்கும் ஆயுதப் போராட்டத்தை நாம் விரும்பவில்லை. அதையே வலியுறுத்துகிறோம்.
ஆயுதப் போராட்டம் பற்றிய சுமந்திரனின் கருத்து பற்றிய கேள்விக்கு,
சுமந்திரன் பேசியது தனிப்பட்ட விடயம். அது பற்றி நான் கதைக்க விரும்பவில்லை. இந்த விடயங்களை பாவித்து எமது கட்சியை உடைக்க பலர் முயற்சிக்கிறார்கள். நாம் அதற்கு ஒத்தழைக்க மாட்டோம்.
சுமந்திரனின் கட்டுப்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சென்று விட்டது எனக் கூறுவது கற்பனை. அதை முற்றாக நிரா கரிக்கிறேன். கட்சியின் செயற்குழு, மத்தியகுழு, பாராளுமன்ற குழு கூடியே முடிவுகள் எடுக்கிறோம். யாரும் தனிப்பட்ட ரீதியில் முடி வெடுப்பதில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவரை அடையாளம் கண்டுவிட்டீர்களா என்ற கேள்விக்கு,
அது மக்களின் அதிகாரம். கட்சியின் அதிகாரம். உரிய நேரத்தில், உரியவர் அந்த பொறுப்பில் வருவார். இந்த பொறுப்பில் இருப் போமென நாம் கற்பனை செய்தோமா? தமது கடமையை உண்மையாக வும், நேர்மையாகவும் மக்கள் பணியை செய்து வந்தால், மக்கள் தமது தலைவர்களை தீர்மானிப்பார்கள்.
நான் தேசியக்கொடியை மதிக்கிறேன். தேசியக்கொடியை ஏற்கிறீர்களா, இல்லையா என்ற கேள்விகளை ஏன் கேட்கிறீர்கள்? இதெல்லாம் தேவையில்லாத கேள்விகள். இந்த கேள்விகளால் எமது சமூகத் திற்கு என்ன நன்மை? இப்படியான கேள்விகளால் எமது மக களை குழப்ப பலர் முயற்சிக்கிறார்கள். ஊடகங்களும் முயற்சிக்கின்றன.
இப்படியான கேள்விகளிற்கு பதிலளித்து, அதற்கு நான் உதவலாமா? இப்படியான கேள்விகளிற்கு நான் பதிலளிக்க மாட்டேன். இப்படியான கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம் என்றார்.