செட்டிகுளம் பிரதேச சபையில்கடமையாற்றும் இளம் யுவதி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
Share

வவுனியா, செட்டிகுளம் பிரதேச சபையில் கடமையாற்றும் இளம் யுவதி ஒருவர் கிணறு ஒன்றில் விழுந்து மரணமடைந்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, செட்டிகுளம், துடரிக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இளம் யுவதி ஒருவரை காணவில்லை என தேடிய போது உறவினர்கள் அவரை வீட்டு கிணற்றில் அவதானித்துள்ளனர்.
இதனை அவதானித்த உறவினர்கள் அயலவர்களின் உதவியுடன் கிணற்றிலிருந்து அவரை மீட்டு, வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி குறித்த 21 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.
பெண் உயிரிழந்தமைக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் அவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா, செட்டிகுளம் பிரதேச சபையில் கடமையாற்றும் திருக்கேதீஸ்வரநாதன் கலைவாணி (வயது-21) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.