கொரோனா அச்சத்தை போக்க பச்சை மீனைச் சாப்பிட்டார் முன்னாள் இராஜாங்க அமைச்சர்
Share
மக்கள் மீன் சாப்பிடுவதற்கு அச்சப்படத் தேவையில்லை, தாராளமாக மீன் சாப்பிட லாம் எனக் கூறியிருக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆராய்ச்சி பச்சையாக மீனைச் சாப்பிட்டுக் காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடை பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட மீன்பிடித் துறையின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆராச்சி பச்சையாக மீனைச் சாப்பிட்டுக் காட்டியுள்ளார்.
மக்கள் மீன்களை கொள்வனவு செய்யாத காரணத்தினால் மீனவர்கள் பெரும் சிரமங்களை அனுபவிப்பதாக கூறினார்.
மீன்களில் கொரோனா வைரஸ் இல்லை என்று கூறிய அவர் அதனை உறுதிப்படுத்தும் வகையில் செய்தியாளர்களின் முன்னிலையில் மீனைச் பச்சையாக சாப்பிட்டுக் காட்டினார்.