கொரோனாவால் நேற்றும் 5 பேர் மரணம்
Share
நாட்டில் கொரோனா தொற்றால் நேற்றும் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாட்டில் கோவிட் – 19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் நேற்று செவ்வாய்க்கிழமை +401 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 18 ஆயிரத்து 75 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.