கைது செய்யப்படுபவர்களை பொலிஸ் துன்புறுத்தக் கூடாது
Share
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையுடன் தொடர்புடைய கைது சம்பவங்கள் நாட்டின் சட்டங்களுக்கு அமைவானதாக இருக்க வேண்டும் என, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடுகம, பதில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ளகடிதத்தில் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் போலியான தகவல்களை பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் அண்மை யில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறான சம்பவங்களின் போது, கருத்து சுதந்திரத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு.
அத்துடன் கைது செய்யப்படும் நபர்களை துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தக்கூடாது எனவும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடுகம வலி யுறுத்தியுள்ளார்.