குற்றம் சாட்டப்பட்ட முருகனின் தந்தை புற்றுநோயால் மரணம்
Share
ராஜிவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள முருகன் என்கிற ஸ்ரீகரனின் தந்தை வைரவப்பிள்ளை வெற்றிவேலு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன் இந்தியாவின் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும் அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் 28 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள்தண்டனை அனுபவித்து வருகின்றார்கள் என்பது குறிப் பிடத்துக்கது.
இறுதியாக இவரின் உடல் நிலையை கருத்திற்கொண்டு வீடியோ அழைப்பு மூலமாக முருகனுக்கு தந்தையுடன் பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற விண்ணப்பம் முன்வைக்கப்பட்டபோதும் அது ஏற்றுக் கொள்ளப்படாமல் தனது மகனு டன் பேசமுடியாமலே உயிரிழந்துள்ளார்.
அவரின் இறுதிக்கிரியைகள் இன்று இத்தாவிலில் நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.