குணமடைந்து வீடு திரும்பியவருக்கு மீண்டும் கொரோனா தொற்று
Share
ஜாஎல பகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்றுத் தாக்கம் இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மார்ச் 17ஆம் திகதி அங்கொடவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவ மனையில்அனுமதிக்கப்பட்ட அவர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்றதன் பின்னர் குணமடைந்தார்.
பின்னர் ஏப்ரல் 17ஆம் திகதி அன்று வீடு திரும்பினார்
இதன் பின்னர் திடீரென நேற்று மார்பு வலிகாரணமாக அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நோயாளி மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டார்.
அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று தெரியவந்தது.
பின்னர் மேலதிக சிகிச்சைக் காக அங்கொடவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.