குடியிருப்புக்குள் நுழைந்த யானையால் மக்கள் அச்சம்
Share

வவுனியா கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் பகல் நேரத்தில் குடியிருப்புக்குள் வந்த யானையால் பொது மக்கள் மத்தியில் அச்சமான நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் காலை குறித்த பகுதியில் உள்ள விவசாயி ஒருவர் தனது காணி யில் அச்சுறுத்தும் வகையில் யானை ஒன்று நிற்பதை அவதானித்ததுடன், கனகராயன் குளம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத் திற்கு சென்ற பொலிஸார் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
யானைவெடிகள் மற்றும் துப்பாக்கிகளுடன் சென்ற வன ஜீவ ராசிகள் திணைக்களத்தினர் குறித்த யானையை அப்பகுதியிலிருந்து அகற்றி காட்டுப்பகுதிக்குள் விட்டனர்.
குறித்த பகுதியில் யானைகளின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் விவசாய உற்பத்திகள் அழிவடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித் தனர்.