Type to search

Headlines

கணவாய் சாப்பிட்ட 11 வயது சிறுவன் மட்டக்களப்பில் மரணம்

Share

கணவாய் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் ஒவ்வாமை காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு – கல்லடியை சேர்ந்த அன்பு தாஸ் கோகுல் (வயது-11) என்ற சிறுவனே நேற்று உயிரிழந்தார்.

சிறுவனின் குடும்பத்தை சேர்ந்த மேலும் மூவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 18ஆம் திகதி மீன் வியாபாரி ஒருவரிடம் வாங்கிய கணவாயை உயிரிழந்த சிறுவனின் தாயார், சகோதரன் தவிர ஏனைய 5 பேர் பகல் உணவாக சமைத்து சாப்பிட்டனர்.

இதனையடுத்து அடுத்த நாள் கணவாய் சாப்பிட்ட அனைவருக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மருந்து எடுத்துள்ளனர்.

இந்நிலையில் நோய் குணமடையாததால் திங்களன்று குறித்த சிறுவன் மற்றும் சிறுவனின் அம்மம்மா, அம்மப்பா ஆகியோர் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்பின்னர் சிறுவனின் தந்தையார் மற்றும் மாமனார் ஆகியோரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையிலேயே அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று மரணமானார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link