Type to search

Headlines

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் வெளிவிவகார அமைச்சர் தினேஷிடன் பேச்சு

Share

இலங்கையின் அண்மைக்கால அரசியல் மாற்றங்கள் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் என்பன தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சேய்பி, இத்தாலி மற்றும் நெதர்லாந்துக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள், ருமேனியா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதரகங்களின் அலுவல்களுக்குப் பொறுப்பான அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

மீண்டும் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட தினேஷ் குணவர்தன விற்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதிநிதிகள், தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இலங்கை நெருக்கமாகச் செயலாற்றி வருவது குறித்து மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

மேலும் இதன் போது இலங்கை யின் மிக முக்கியமான ஏற்றுமதிச் சந்தையாக ஐரோ ப்பா விளங்குவதுடன் இலங்கைக்கான நேரடி வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாத்துறை வருமானம் என்பனவும் அதனூடாகவே அதிகளவில் கிடைக்கப் பெறு வது பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link