எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று காலமானார்
Share
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 74.
கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்ட நிலையில், பாடகர் எஸ்.பி. பாலசுப்பிர மணியம் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவ ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றுப் பிற்பகல் உயிரிழந்தார்.
ஆந்திராவில் உள்ள கொணேட்டாம் பேட்டையில் ஜூன் 4, 1946 இல் பிறந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், திருப்பதியில் படித்து முடித்து, பாடும் வாய்ப்புத் தேடி சென்னை வந்தவர்.
ஸ்ரீபதி பண்டித ரதயுல பாலசுப்ரமணி யம் என அழைக்கப்படுகிற எஸ்.பி.பிக்கு சாவித்திரி என்ற மனைவி. காதல் மணம் புரிந்த இந்தத் தம்பதிக்கு பல்லவி, சரண் என இரண்டு பிள்ளை கள். பல்லவி பாடகியாக இருந்திருக்கிறார். சரண் பாடகராகவும், நடிகராகவும், தயா ரிப்பாளராகவும் இருக்கிறார். முதன் முதலாக எஸ்.பி.பி. திரைப்பாடலாகப் பாடியது ‘சாந்தி நிலையம்’ படத்துக்காக ‘இயற்கை எனும் இளைய கன்னி, ஏங்குகிறாள் துணையை எண்ணி’ தான்.
ஆனால், திரைக்கு முதலில் வந்தது ‘அடிமைப் பெண்’ படப் பாடலான ‘ஆயிரம் நிலவே வா’. இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம் என 16க்கும் மேற்பட்ட மொழி களில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார்.
“துடிக்கும் கரங்கள்” படம் தொடங்கி பல்வேறு மொழிகளில் 60 படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். தமிழ், தெலு ங்கு, கன்னடம் என 50 படங்களுக்கு மேல் நடிக்கவும் செய்திருக்கிறார் எஸ்.பி.பி.எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இந்த வரு டம் ஜனவரி மாதம் கொழும்பில் நடை பெற்ற கம்பன் விழாவில் கலந்து கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.