இலங்கையின் ஆதிக் குடிகள் தமிழரே என்று கூறியதற்காக நீதியரசர் விக்னேஸ்வரனிடம் பொலிஸார் தீவிர விசாரணை
Share
இலங்கையின் மூத்த குடிகள் தமிழ் மக்களே என நீதியரசர் விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பொலிஸார் நேற்று அவரிடம் இரண்டு மணிநேரம் தீவிர விசாரணை செய்தனர்.
கொழும்பிலிருந்து விடப்பட்ட உத்தரவின் பேரில் நல்லூரில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து இந்த விசாரணை இடம்பெற்றது.
விக்னேஸ்வரனின் அறிக்கை இனங்களிற்கிடையில் முறுகலை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டு, அவர் அவ்வாறான அறிக்கையை வெளியிட்டாரா? என்பதை உறுதி செய்யுமாறு கொழும்பிலிருந்து தமக்கு உத்தரவு வந்ததாக, விசாரணைக்கு வந்த அதிகாரி தெரிவித்தார்.
இலங்கையின் மூத்த குடிகள் தமிழர்களே என்பதை பொலிஸ் அதிகாரிக்கும் தெரிவித்த விக்னேஸ்வரன், தான் அவ்வாறு அறிக்கை வெளியிட்டது உண்மையென குறிப்பிட்டு, அறிக்கையின் பிரதியொன்றையும் வழங்கி வைத்திருந்தார்.
அறிக்கையை கொழும்பிற்கு அனுப்பி, தேவைப்பட்டால் தேர்தலின் பின்னர் விசாரணைக்கு வருவதாக பொலிஸார் தெரிவித்து சென்றனர்.
இது தொடர்பில் விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் மக்களுக்கு இரண்டு விடயங்களைக் கூற விரும்புகின்றேன்.
ஒன்று இன்று (நேற்று) என்னை வந்து சந்தித்து என்னிடம் ஆங்கிலத்தில் நான் எழுதிய எனது ஒரு பழைய கேள்வி -பதில் கட்டுரை சம்பந்தமாகப் பொலிஸார் விசாரணைசெய்தமை, இரண்டு அண்மையில் பிரதம மந்திரி அவர்கள் பிரபாகரன் கேட்டதைத்தான் எழுத்தில் தரமுடி யாது என்று கூறியமை பற்றியன.
கொழும்பு தலைமையகப் பொலிஸாரின் பணிப்பின் பேரில் இன்று (நேற்று) பொலிஸார் என்னிடம் சென்றவருடம் டிசம்பர் மாதம் 14ந் திகதி ஆங்கிலத்தில் எழுதிய கேள்வி பதில் கட்டுரை சம்பந்த மாகக் கேள்வி கேட்டார்.
அதை எழுதியது நான் தான் என்று கேட்டு அதன் உள்ளடக்கம் பற்றி உரிய தொலைக்காட்சி மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது என்றும் பொலிஸாருக்குப் பல முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
அவர் குறிப்பிட்ட கேள்வி – பதில் என் காரியாலயத்தில் பதிவு செய்திருந்த படியால் அதன் பிரதி ஒன்றை வந்தவரிடம் வழங்கி அதை வெளியிட்டது நான் தான் என்று கூறி அதன் உள்ளடக்கம் நான் எழுதியவை என்றும் அதுபற்றிக் கேள்விகள் வேண்டுமானால் கேட்கலாம் என்றும் கூறினேன்.
அவர் குறித்த ஆவணத் தைத்தான் கொழும்புக்கு அனுப்பப் போவ தாகவும் உள்ளடக்கம் பற்றிய கேள்விகள் தமக்குத் தரப்படவில்லை என்றும் கூறினார்.
அதனால் தாம் அதைக் கொண்டுபோய் உயர் அதிகாரிகளுடன் பேசித் திரும்பவும் வருவதாகக் கூறினார்.
நான் பதில் அளிக்க என்னிடம் கேட்கப் பட்ட கேள்வி பின்வருமாறு இருந்தது.
“மலையகத் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் மற்றைய சமூகங்களுடன் கைகோர்த்துச் செல்லும்போது வடக்கு கிழக்கு மக்கள் மட்டும் பிரிந்து நிற்பதற்குக் காரணம் என்ன?
அதற்குப் பதிலாக நான் வடக்கு கிழக் குத் தமிழ் மக்களின் தனித்துவம் பற்றிக் கூறிநாம் தொடர் ந்து சரித்திர காலத் திற்கு முன் பிருந்து வடக்கு கிழக்கை எமது பாரம்பரிய வாழ்விடங்களா கக் கொண்டிருப் பதையும், பௌத்தம் முதன் முதலில் தமிழர்களாலேயே ஏற்றுக் கொள்ளப் பட்ட தென்றும், அப்போது சிங்கள மொழி வழக்கத் திற்கு வந்திருக்கவில்லை என்றும் அம்மொழி கி.பி. 6ம், 7ம் நூற்றாண் டளவில்தான் மொழியாகப்பரிண மித்தது என்றும் பல விடயங்களைக் குறிப்பிட்டிருந் தேன்.
சிங்களவருக்கு தவறான வரலாறு அவர்கள் பற்றி அவர்களுக்கு புத்த பிக்குகள் போன்ற வர்களால் போதிக் கப்பட்டு வந்துள் ளது என்றும் கூறியிருந்தேன்.
நாங்கள் ஒரு பாரம்பரியத்தை நீண்ட வரலாற்றைக் கொண்டிருப்பதால் நாம் எமது வடக்கு கிழக்கில் சுயாட்சி கேட்டுள் ளோம் என்று அவர் அனுப்பி வைத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.