இன்று இரவு 8 மணிமுதல் திங்கள் காலை 5 மணிவரை நாடளாவியரீதியில் மீண்டும் ஊரடங்கு
Share
இன்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் 27ஆம் திகதி திங்கள் காலை 5 மணி வரை நாடு தழுவிய ரீதியாக மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மறு அறி வித்தல் வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களுக்குள் பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளியேறவும் அனை வருக்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலப்பகுதியில் அத்தியாவசியத் தேவைகளை முன்னெடுக்கவும் விவசாயத்தில் ஈடுபடவும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் திருத்தமின்றி அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.