Type to search

Headlines

இந்திய உயர்ஸ்தானிகருடன் ஜனாதிபதி கோட்டா சந்திப்பு

Share

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்தார்.

இலங்கையின் இராஜதந்திர உறவுகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கடந்த மே 14ஆம் திகதி வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக அவர் தனது நற்சான்றுப் பத்திரத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

சந்திப்பின் பின் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, இரு நாடுகளுக்குமான ஒத்துழைப்பின் மூலம் புதிய துறைகளை கண்டறிந்து இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை ஜனாதிபதி இந்திய உயர்ஸ்தானிகரிடம் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

கடந்த 23 ஆம் திகதி சனிக்கிழமை இந்தியப் பிரதமருடன் தொலைபேசியூடாக மேற் கொண்ட சுமுகமான உரையாடலை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, தற்போதைய கஷ்டமான சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு வழங்கிய உதவி தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link