அனைத்து மாவட்டங்களுக்குமான பொதுப் போக்குவரத்துக்கு திங்கள் முதல் அனுமதி
Share
கொழும்பு, கம்பஹா உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் இடையேயான பொதுப் போக்கு வரத்துச் சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இடம்பெறும் என்று பயணிகள் போக்குவரத்து அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இவ்வாறு போக்குவரத்துச் சேவைகள் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்துச் சேவைகள் கடந்த மே 26ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட போதும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில், சுகாதார அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலை யடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான போக்குவரத்துக்கு அனுமதியை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.