விவசாய முயற்சிகளுக்கு உதவி செய்ய முன்வாருங்கள்
Share
கொரோனா நோய்த் தொற்றுக்குப் பின்னர் விவசாய முயற்சிகள் மும்முரம் பெற்றுள்ளன என்பதைக் கூறித்தானாக வேண்டும்.
கொரோனாத் தொற்றுப் பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்குச் சட்டம் அமுலாகிய போது வீடுகளுக்குள் முடங்கிய மக்கள் வீட்டுத் தோட்டத்தின் மீது கருசனை செலுத்தினர்.
வீட்டுத் தோட்ட முயற்சிகள் வெற்றியளித்ததுடன் உளரீதியான உற்சாகத்தையும் ஏற் படுத்தியது.
இதனால் விவசாயத்தின் மீதான நாட்டம் அதிகரிக்கலாயிற்று.
இதுதவிர, உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றுக் காரணமாக உணவுப் பஞ்சம் ஏற்படலாம் என்ற சிந்தனை மக்கள் மத்தியில் ஏற்பட, விவசாயத்தின் மீதான நாட்டம் உத்வேகம் பெற்றுள்ள தெனலாம்.
இதன் காரணமாக நெற்செய்கையில் மிகப்பெரியதொரு முன்னேற்றம் ஏற்படவுள்ளதை எதிர்வுகூற முடியும்.
அதாவது இதுகாறும் விதைக்கப்படாத வயல்கள் அனைத்தும் பண்படுத்தப்பட்டு நெல் விதைப்பதற்கான ஏற்பாடுகள் தடல்புடலாக நடக்கின்றன.
காணிச் சொந்தக்காரர்கள் நெல் விதைக் காதவிடத்து, குறித்த வயல்களை ஏனைய வர்கள் உழுது பண்படுத்தி விதைக்க முடியும் என்ற விசேட அறிவிப்புகளும் நெற்செய்கை மீது அதீத ஆர்வத்தையும் கருசனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விவசாயத் திணைக்களம், கமத்தொழில் திணைக்களம் மற்றும் விவ சாய அமைப்புகள் என்பன நெல் உள்ளிட்ட விவசாயச் செய்கைக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுக்க முன்வர வேண்டும்.
விவசாயச் செய்கை தொடர்பில் இருக்கக் கூடிய அரச மானியங்கள் மற்றும் ஊக்குவிப் புகள் அனைத்தும் விவசாயிகளுக்கு கிடைப்பது உறுதி செய்யப்படுமாயின் விவசாயச் செய்கையில் பாரிய முன்னேற்றம் ஏற்படும்.
இதற்கு மேலாக, நெற்செய்கை வெற்றி யளிக்க வேண்டுமாயின் கட்டாக்காலி கால் நடைகளைக் கட்டுப்படுத்துவது மிக மிக அவசியமாகும்.
பொதுவில் வயல் நிலங்களுக்கு வேலி அமைத்து நெல் விதைப்பதென்பது சாத்தியப் படாததொன்று.
எனவே பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி சபைகள் மற்றும் கமத்தொழில் அமைப் புகள் அதிரடியாகக் களத்தில் இறங்கி கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்து வதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்தாக வேண்டும்.
இதுவிடயத்தில் பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்குவார்களாயின் விவசாய முயற்சி பெரு வெற்றியடையும் என்பது சத்தியம்.