வாக்களிப்பு வீதம் குறையாமல் இருக்க வேண்டும்
Share
ஜனநாயகம் என்பது தேர்தல் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் நடைபெறும் தேர்தலின்போது பொதுமக்கள் வழங்குகின்ற வாக்குகளின் அடிப்படையில் அரசாங்கம் அமைகிறது.
ஆக, பொதுமக்கள் வழங்குகின்ற ஆணை என்பதை தேர்தலின்போது அவர்கள் அளிக் கின்ற வாக்குகளே தீர்மானிக்கின்றன.
எனவே ஒரு நாட்டில் உச்சமான ஜனநாயகம் நிலை பெற வேண்டுமாயின், தேர்தலின் போது ஒட்டுமொத்த வாக்காளர்களும் தமது வாக்குகளை அளிக்க வேண்டும்.
எனினும் நடைமுறையில் 65 சதவீதமான வர்கள் வாக்களித்தாலே அது பெரியதொரு விடயம் என்பதாக உள்ளது.
இவ்வாறு 65 சதவீதமான வாக்குகள் பதிவு செய்யப்படுகிறது எனும்போது, 35 சதவீதமான வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிக்க வில்லை என்பது தெரிய வருகிறது.
இவ்வாறு 35 சதவீத வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிக்காமைக்கு என்ன காரணம் என்பது கண்டறியப்பட வேண்டும்.
எனினும் தேர்தல் முடிந்து விட்டால் வாக் களிக்காதவர்கள் பற்றி எந்தக் கவனமும் செலுத்தப்படுவதில்லை.
ஆக, 65 சதவீதமான மக்களே அரசாங் கத்தை அமைப்பதில், எதிர்க்கட்சியைத் தீர் மானிப்பதில் பங்கெடுக்கின்றனர்.
ஏனைய 35 சதவீதமானவர்களும் அக்கறையற்றவர்களாக அன்றி தேர்தலில் போட்டியிடு கின்றவர்கள் மீது நம்பிக்கையற்றவர்களாக அல்லது வேறு காரணங்களுக்காக வாக் களிப்பதில் இருந்து விலகிவிடுகின்றனர்.
இவ்வாறான விலகல் ஜனநாயக ஆரோக்கியத்துக்கு ஏற்புடையதன்று.
எனவே ஒட்டுமொத்த வாக்காளர்களும் வாக்களிப்பதற்கான விழிப்புணர்வுகளும் உற் சாகப்படுத்தல்களும் தேவையாக உள்ளன.
நிலைமை இதுவாக இருக்கையில், நம் நாட்டில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற லாம் என எதிர்பார்க்கப்படுகின்ற பொதுத் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிப்பதற்கான உற்சாகப்படுத்தல்கள் இரட்டிப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
இல்லையேல் கொரோனாத் தொற்றைச் சாட்டாக வைத்து வாக்களிப்பு என்பது மந்த மாகிவிடும்.
மிகக் குறைந்த வாக்குகள் அளிக்கப்பட்டாலும் அரசாங்கம் அமைவது நியதியாக இருப் பினும் அஃது ஏதோ சாட்டுக்கு நடந்த சடங்கு போல ஆகிவிடும்.
ஆகையால் வாக்களிப்பு வீதம் குறையாமல் பார்த்துக் கொள்வது அனைவரதும் தலை யாய கடமையாகும்.