மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்…
Share
உணவுப் பண்டங்கள் உள்ளிட்ட அத்தனை பொருட்களினதும் விலைகள் எகிறிக் கொண்டே இருக்கின்றன.
ஒரு கிலோ உழுந்து ஆயிரம் ரூபாவைக் கடந்து விட்டது. ஒரு தேங்காய் நூறு ரூபாவுக்கு வந்துவிட்டது.
தவிர அரிசி, எள்ளு, பயறு என அனைத் துத் தானியங்களினதும் விலைகள் நாளுக்கு நாள் ஏறிய வண்ணமும் இருக்கிறது.
திருமணம் உள்ளிட்ட அத்தனை சபை சந்திகளிலும் பரிமாறப்படுகின்ற உழுந்து வடை இப்போது இல்லாமல் போய், கடலை வடை அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது.
இவ்வாறாக தானியங்களின் விலை ஏற் றம் எங்கள் உணவுக் கலாசாரத்தில் மாற் றத்தை ஏற்படுத்தப் போகின்றது.
எனவே உணவுப் பொருட்களின் விலை யேற்றத்தை எதிர்கொள்ள விவசாய முயற்சி களில் நாம் அனைவரும் ஈடுபட வேண்டும்.
எங்கெல்லாம் நிலம் இருக்கிறதோ அங் கெல்லாம் தானிய விதைப்புகளும் மரக்கறிச் செய்கைகளும் நடந்தாகட்டும்.
வீடுகள் தோறும் தென்னங்கன்று நட்டு வீட்டுத் தேவைக்கான தேங்காயை குடியிருக் கும் வளவில் பெற்றுக் கொள்கின்றதான முயற்சிகளும் கட்டாயம் தேவை.
உண்மையில் எங்கள் வாழ்விடத்தில் வள மிக்க மண் வீணே கிடக்கிறது.
அதேநேரம் எதுவுமில்லை என்று நாம் வருந்துகிறோம். இங்குதான் ஒரு பெரும் உண்மையை வள்ளுவர் நமக்கு எடுத்து ரைக்கிறார்.
ஆம்,
இலமென்று அசையி இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்
என்றார் வள்ளுவர்.
எதுவுமில்லையே என்று கவலைப்படு வோரைப் பார்த்து நிலமகள் வெட்கித் தலை குனிவாள்.
இங்குதான் ஓர் உண்மை புலப்படுத்தப்படு கிறது. அதாவது இந்த மண்ணில் பிறந்த நமக்குத் தேவையான அனைத்தையும் நில மகள் தந்தீவாள்.
அதனைப் பெற்றுக் கொள்ள நாம் முயற்சி யுடையவர்களாக இருக்க வேண்டும்.
எனினும் இப்போது எங்கள் வாழ்வில் உடல் உழைப்புக்கு இம்மியும் இடமில்லை என்றாயிற்று.
அரச உத்தியோகம், வர்த்தகம், கெளரவ மான வேலை என்றவாறு எங்கள் வாழ்க் கைப் பயணம் செல்கிறது.
விவசாய முயற்சி பற்றி நாம் கிஞ்சித்தும் நினைப்பதில்லை.
இவ்வாறான சூழ்நிலையில்தான் உணவுப் பொருட்களின் விலைகள் வானத்தின் உச்சத் தைத் தொடுவதற்கு முயற்சி செய்கின்றன.
எனவே நம்மை வாழ வைக்கும் பூமியை வளமாக்குவோம். அதனூடு எங்களுக்கான உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வோம்.
இவ்வாறு செய்தால் மண்ணில் நல்ல வண்ணம் நாம் வாழலாம்.