பேரவை விடுத்த அழைப்பின் மீது அனைத்து தரப்பும் கவனம் செலுத்த வேண்டும்
Share
நாடளாவிய ரீதியில் கல்விப் பெறுபேறுகளின் அடிப்படையில் எமது வடக்கு மாகாணம் பின்தங்கியுள்ள நிலையில் இருப்பதான புள்ளிவிபரத் தகவல்கள் பலருக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்து மாணவர்களைப்போல் படிக்க வேண்டும் என்று சிங்கள – முஸ்லிம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுவதான செய்திகளைக் கேட்ட ஓர் இனம், இன்று கல்வியில் வீழ்ச்சி கண்டிருப்பதென்பது வேதனையிலும் வேதனை.
இவ்வாறு வடபுலம், கல்வி வீழ்ச்சி கண்டுள்ளமைக்குக் காரணங்கள் பலவாறாக உள்ளன.
அதில் குறிப்பாக நடந்து முடிந்த யுத்தமும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் எமது மாண வர்களின் கல்வி வீழ்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றது.
இதனைவிட பல பாடசாலைகள் வெறிச் சோடிக் கிடக்க, ஒரு சில பாடசாலைகளில் மாணவர்கள் குவிந்திருப்பதும் கல்வி வீழ்ச்சி யில் செல்வாக்குச் செலுத்துகின்றது என் பதையும் இங்கு கூறித்தானாக வேண்டும்.
இங்கு எமது கல்வி வீழ்ச்சியடைகிறது என நாம் அழுது புலம்புவதால் – அறிக்கை விடுவதால் – குற்றச்சாட்டுக்களை மாறி மாறி முன்வைப்பதால் கல்வியில் எந்த முன்னேற்ற மும் ஏற்படமாட்டாது.
மாறாக எமது கல்வியில் ஏற்பட்ட வீழ்ச்சிக் கான காரணங்களைக் கண்டறிந்து அவற் றுக்குப் பரிகாரம் தேட வேண்டும்.
அதுவே எங்கள் கல்வி உயர்ச்சிக்கு உதவுவதாக இருக்கும்.
தவிர, வீழ்ச்சியடைந்துள்ள எமது கல்வியைத் தூக்கி நிறுத்தும் பெரும் பொறுப்பை தனித்து கல்வித் திணைக்களத்திடமோ அன்றி பாடசாலைகளிட மோ அல்லது பெற்றோர்களிடமோ மட்டும் விட்டுவிட முடியாது.
மாறாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் விழிப்படைய வேண்டும். அனைத்துத் தரப்பு களும் தமது வகிபங்கை ஆற்ற வேண்டும்.
அப்போதுதான் எங்களின் கல்வி எழுச்சி பெறும்.
அந்த வகையில் எமது மாணவர்களின் கல்வி தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை கருசனை கொண்டுள்ளதுடன் அது தொடர்பில் அந்த அமைப்பு விடுத்த விசேட அறிக் கையில்,
எமது மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கான வகிபாகத்துக்காக அனைத்துத் தரப்பையும் முன்வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
எனவே தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள இந்த அழைப்பை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு உள்ளிட்ட அதன் கட்டமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக சமூகம், உயர் கல்விப் பீடங்கள், மருத்துவ நிபுணர்கள், உளவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நிறுவனத் தலைவர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், பொது அமைப்புகள், பெற் றோர்கள் என அனைத்துத் தரப்புகளும் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பு மீது கவனம் செலுத்தி, எங்கள் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்குப் பேருதவி புரிதல் வேண்டும்.
கல்விக்கான இந்த எழுச்சி சரியான ஒழுங்கில் பயணிக்குமாயின் மீண்டும் எங்கள் கல்வி உயர்வு பெறும். இது சத்தியம்.