புதிய நீதியமைச்சர் தமிழர்களை நோகடிக்கக்கூடாது
Share
சிறுபான்மை இனத்துவ அரசியல்வாதிகளை எப்படிக் கையாள்வது என்ற விடயத்தில் சிங்கள அரசியல் தரப்புகள் மிகுந்த சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளன.
விடுதலைப் புலிகளின் காலத்தில் வெளி விவகார அமைச்சராக லக்ஷ்மன் கதிர்காமர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இனத்தால் தமிழரான லக்ஷ்மன் கதிர் காமரை இலங்கையின் வெளிவிவகார அமைச் சராக நியமித்திருக்கின்றோம்.
ஆனால் தமிழ் இனத்தை நாங்கள் வஞ் சிப்பதாகக் கூறுவது எவ்வளவு தவறு என்பதை நீங்களே பாருங்கள் என உலக நாடுகளுக்குச் செய்தி கூறுவதாக அன்றைய சூழலை இலங்கை அரசு கையாண்டது.
அதற்கு முன்னதாக வெளிவிவகார அமைச் சராக ஹமீட்டை நியமித்திருந்தனர்.
இதன்பின்னர் நீதியமைச்சராக ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டார்.
சிறுபான்மை இனமான முஸ்லிம் பாராளு மன்ற உறுப்பினரை நாங்கள் நீதியமைச்சராக நியமித்திருக்கிறோம் என்று பிரசாரம் செய்வதற்காக அப்படியயாரு ஏற்பாட்டை சிங்களத் தரப்புகள் செய்திருந்தன.
தனக்கு நீதியமைச்சர் பதவி தந்தமைக் காக ரவூப் ஹக்கீம் ஜெனிவாவுக்குச் சென்று தமிழ் இனத்துக்கு எதிராகக் கதைத்து விட்டு வந்தார்.
இப்போது நீதியமைச்சராக அலி சப்ரி நிய மிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினருக்கு நீதியமைச்சர் பதவியை வழங்கியதனூடாக, சிங்கள ஆட்சியாளர்கள் உலக நாடுகளிடம் இருந்து அதிலும் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளிடம் இருந்து கனதியான உதவியைப் பெறத் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கு மேலாக; ஈஸ்ரர் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர், இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்பட்டது என்ற பலத்த குற்றச்சாட்டுக்களில் இருந்து விலக்குப் பெறுவதற்கும் அலி சப்ரியின் நீதியமைச்சர் பதவி உதவப் போகிறது.
நிலைமை இதுவாக இருக்கையில், நீதி யமைச்சர் அலி சப்ரி தமிழ் மக்களின் போராட் டம் குறித்தும் யுத்தத்தின்போது உயிரிழந்த இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்பிலும் கருத்துரைக்கத் தலைப்பட்டுள்ளார்.
தந்த பதவிக்காகக் கருத்துரைப்பது தன் கடமை என்று அவர் நினைத்திருக்கலாம்.
ஆனால் தமிழ் இளைஞர்கள் நடத்திய ஆயுதப் போராட்டமே சிறுபான்மை முஸ்லிம் மக்கள் இந்த நாட்டில் அச்சமின்றி வாழக் காரணம் என்ற நிதர்சனத்தை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களும் சிங்களத் தரப்புகளும் ஒன்றிணைந்திருந்தால், முஸ்லிம் இனம் இலங்கையில் இருந்ததா? என்ற கேள்வியைத் தவிர வேறு எந்த அடையாளமும் இருந் திருக்க மாட்டாது என்பதுதான் உண்மை.