நோக்கம் இல்லாத முடிவுகளால் தமிழருக்கு என்ன இலாபம்
Share
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்றைய தினம் (04.05.2020) சந்திப் பொன்றை நடத்துவதற்கான அழைப்பை பிரதமர் மகிந்த ராஜபக் விடுத்திருந்தார்.
இந்தச் சந்திப்பு கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீளக் கூட்டுவதற்கானதல்ல. மாறாக தேர்தலை நடத்துவதற்கானது.
எனினும் பிரதமர் மகிந்த ராஜபக்வின் அழைப்பை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி ஆகியன நிராகரித்து விட்டன.
தேர்தலை நடத்துவதற்காக அழைக்கப்படுகின்ற இக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடி யாது என்பது சந்திப்பை நிராகரித்த கட்சிகளின் கருத்து.
நிலைமை இதுவாக இருக்கையில், மேற்படி சந்திப்பில் கலந்து கொள்வதென கூட்ட மைப்பு முடிவு செய்தது.
கூட்டமைப்பின் இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியளித்தது.
பரவாயில்லை, பிரதமர் மகிந்த ராஜபக் அழைத்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு கலந்து கொள்ளக்கூடாது என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
ஆனால் கூட்டமைப்பின் விசுவாசத்துக் குரிய ஐக்கிய தேசியக் கட்சி கலந்து கொள்ளாத கூட்டத்தில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு ஆதரித்து நின்ற சஜித் பிரேம தாஸ தரப்பு கலந்து கொள்ளாத நிலையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொண்டது எனில், அதற்கான காரணம் என்ன? அந்தச் சந்திப்பில் பிரசன்னமாக இருப்பதன் மூலம் கூட்டமைப்பு எதைச் சாதிக்க நினைத்தது? அந்த நினைப்பை சாதிக்க முடிந்ததா? எனப் பல் வினாக்கள் எழுகை பெறும்.
இந்த வினாக்களுக்கு கூட்டமைப்பு எந்தப் பதிலையும் தரும் பட்சத்தில்,
அப்படியானால், ரணிலை விலக்கி மகிந்தவைப் பிரதமராக்கியபோது நீங்கள் நீதிமன்றம் போகாமல் இருந்திருக்கலாமே அல்லது நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் எவரை யும் பெயர் குறிப்பிட்டு ஆதரிக்காமல்; தமிழ் மக்கள் தீர்மானிப்பர் என்று நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் கூறிய நிலைப்பாட்டில் நீங்களும் இருந்திருக்கலாமே.
அப்போது கிடைத்த அருமந்த சந்தர்ப்பங்களையயல்லாம் பக்குவமாகக் கையாளாமல் பதறிக் கெடுத்து விட்டு,
இப்போது பிரதமர் மகிந்த ராஜபக் அழைத்த கூட்டத்துக்கு நீங்கள் சென்றீர்கள் என்றால்,
நல்ல பிள்ளைக்கு நடிப்பதைத் தவிர, உங்களிடம் தமிழ் மக்கள் சார்ந்த இலக்குகள், நோக்கங்கள் எதுவும் இல்லை என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.
அதுமட்டுமன்றி, நீங்கள் ஆதரித்த ஐக்கிய தேசியக் கட்சியின் யானை தன் தலையில் மட்டுமல்ல உங்கள் தலையிலும் மண்ணைக் கொட்டிவிட்டது என்பதை இப்போது நீங்கள் உணர்கிறீர்கள் என்பதும் தெரிய வருகிறது.