நீதியரசரின் உரை கண்டு தமிழர் மனம் நிறைந்தது
Share
பாராளுமன்றத்தின் ஒன்பதாவது கூட்டத் தொடர் நேற்று முன்தினம் ஆரம்பமாகியது.
பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர் களுக்கு சபாநாயகரை வாழ்த்திப் பேசுகின்ற சந்தர்ப்பம் கிடைத்தது.
அதுவே அவரின் கன்னி உரையாகவும் இருந்தது.
சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட மகிந்த யாப்பா அபேவர்தனவை வாழ்த்துகின்ற உரையை மிக நுட்பமாக நீதியரசர் விக்னேஸ்வரன் ஆற்றியிருந்தார்.
இந்த உலகின் ஆதி மொழி, இலங்கைத் திருநாட்டின் மூத்த குடிகள் பேசிய தமிழ் மொழி யில் உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன் என்ற விழிப்போடு ஆரம்பமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனின் உரை,
சிங்கள பெளத்த மக்களுக்கு ஒரு பெருந்தத்துவத்தை எடுத்தியம்புவதாக அமைந்தது.
1977இல் யானைப் பலத்துடன் பாராளுமன்ற ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி 1983இல் ஜுலைக் கலவரத்தை அரங்கேற்றியது.
அதன் விளைவு இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு உறுப்பினர் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளது.
இது ஐக்கிய தேசியக் கட்சிக்கு மட்டுமல்ல, நீங்களும் தர்மத்தின் வழியில் நடக்கத் தவ றின் உங்களுக்கும் இதே கதிதான் வந்தாகும் என நீதியரசர் கூறியதைக் கேட்டபோது எம் தமிழ் மக்களின் மனம் மகிழ்ந்தது. நெகிழ்ந்தது.
ஆம், இந்த நாட்டின் ஆதி மொழி தமிழ் என்பதை தனது கன்னியுரையிலேயே நீதியரசர் விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் பதிவிட்டுள்ளார்.
தவிர, தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரி மையை வழங்க மறுப்பீர்களாயின் இப்போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு நேர்ந்த அதே கதி தான் உங்களுக்கும் ஏற்படும் என்று இலங் கைப் பாராளுமன்றத்தில் துணிந்து கூறியதை எவரும் சாதாரண விடயமாகக் கருதிவிட முடியாது.
அதேநேரம் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிபீடமேறியுள்ள மகிந்த ராஜபக்வின் அரசாங்கத்தைப் பார்த்து 1977இல் ஐக்கிய தேசியக் கட்சியானது பலத்துடன் ஆட்சி அமைத்தது.
ஆனால் அவர்கள் தமிழ் மக்களுக்குச் செய்த அநியாயத்தால் அந்தக் கட்சி நொந்து நூலாகி விட்டது.
இதே கதி உங்களுக்கும் ஏற்படலாம் என எழுந்து நின்று துணிவோடு கூறுகின்ற தகை மையும் தைரியமும் நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு மட்டுமே உண்டு என்பது நிரூபணமாகி விட்டது.
ஆம் உரிமை கிடைப்பது, கிடைக்காமல் போவது என்பதற்கு மேலாக எங்கள் இனத்தின் வரலாற்றை, எங்கள் இனத்துக்கு சிங்கள ஆட்சியாளர்கள் இழைத்த அநீதியை கர்ச்சித்துரைப்பது மிகமிக முக்கியமானது.
அந்தப் பணியை நீதியரசர் விக்னேஸ்வரன் செம்மைபடச் செய்வார் என்பதை அவரது கன்னியுரை கட்டியம் கூறி நிற்கின்றது. எம் தமிழர் மனம் நிறைந்து இருக்கிறது.