Type to search

Editorial

நிலை தடுமாறாத நெஞ்சுக்கு நீதி

Share

இறைவன் உனக்குத் தர நினைத்ததை எந்த மனிதனாலும் தடுத்து விட முடியாது.

இறைவன் உனக்குத் தர நினைக்காததை எந்த மனிதனாலும் தந்துவிட முடியாது.
இந்தத் தத்துவத்தின்பால் நாம் கவனம் செலுத்துவோம்.

நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தனது 79ஆவது வயதில் புதிய கட்சியை ஆரம்பித்து 80ஆவது வயதில் பாராளுமன்ற உறுப்பினரானார்.

இந்த வயதில் கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்று அதில் வெற்றியும் பெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் ஆற்றிய முதலாவது உரை அவரை நோக்கி சர்வதேச சமூகத்தைத் திருப்பியுள்ளது.

கட்சித் தலைவர் என்ற வகையில் பாராளுமன்றத்தில் நீதியரசருக்கு முன் ஆசனம் வழங்கப்பட்டது.

இதன்வழி; சபாநாயகராகத் தெரிவு செய் யப்பட்ட மகிந்த யாப்பாவுக்கு வாழ்த்துத் தெரி விக்கின்ற சந்தர்ப்பம்.

வாழ்த்துத் தெரிவிக்கின்ற சந்தர்ப்பத்தை தக்கமுறையில் பயன்படுத்துவதெனத் தீர் மானித்த நீதியரசர் விக்னேஸ்வரன்,

சபாநாயகரைப் பார்த்து, இந்த நாட்டின் மூத்த குடிகளின் தாய் மொழியாகிய தமிழால் உங்களை வாழ்த்துகிறேன் என்றார்.

இலங்கை மண்ணின் மூத்த குடிகள் தமி ழர்கள் என்பதை தனது முதலாவது உரை யில் விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் கூறியமை தமிழ் மக்களுக்கு மன ஆறுதலை யும் தேறுதலையும் தந்தது.

நம் புலம்பெயர் உறவுகள் நீதியரசரின் உரை கண்டு வியந்தனர்.

ஐயா! நீங்கள் பாராளுமன்றம் சென்ற தால் பெறுவோம் உய்வு என தங்கள் மனப் பதிவுகளை முகநூல்களில் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

நிலைமை இதுவாக இருக்க, இன்னு மொரு கண்டம் கடந்தாக வேண்டும் என்பது விக்னேஸ்வரனின் விதியாயிற்று.

கண்டத்தை எப்படிக் கடப்பது என்றால், அதனை அண்டம் கடந்தவன் பார்த்துக் கொள் வான் என்று அவர் கூறிக் கொண்டார்.

ஏலவே நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நீதியரசர் விக்னேஸ் வரனுக்கு எதிரான வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவ்வாறு வழக்கை விசாரித்தால், நீதியரசர் விக்னேஸ் வரனுக்குத் தண்டனை கிடைப்பது உறுதி என் றும் அஃது அவரைப் பாராளுமன்றம் செல்ல அனுமதிக்காது என்றும் நினைத்து தீர்ப்பை விரைவுபடுத்துமாறு கேட்டவர்கள் தோற்கும் வகையில்,அன்றைய சூழலை அணுவுக்குள் அணு வாய் இருக்கும் அவன் ஆக்கிக் கொண்டான்.

இப்போது என்ன செய்ய முடியும். முதல் உரை மூத்த தமிழ்க்குடி என்பதாக அமைய,
ஐயா! உங்களுக்குப் பக்கபலமாக நான் இருப்பேன் என்று கூறி வழக்கை வாபஸ் பெறுவதுதானே டெனிஸ்வரனுக்கான ஒரே வழி.

ஆக, இப்போது இதன் தொடக்கத்தை திரும்பி வாசியுங்கள். உண்மைத் தத்துவம் புரியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link