நினைவேந்தவும் உரிமையில்லா இனமோ நம் தமிழினம்!
Share
இன்று மாவீரர் நாள். தமிழர் உரிமைக் காகக் குரல் கொடுத்த மாவீரர்களை நினைவு ஏந்துகின்ற நாள்.
எனினும் மாவீரர்களை நினைவேந்துவத ற்கு நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன.
இந்நிலையில் மாவீரர்களை வீடுகளில் நினைவேந்துமாறு தமிழ் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இஃது ஒரு தகவலுக்கானது.
இங்கு மாவீரர்கள் என்போர் யாவர்? என்பதை முதலில் பெரும்பான்மை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மாவீரர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அல்லர். அவர்கள் இந்த நாட் டின் பிரஜைகள். எங்கள் பிள்ளைகள்.
அப்படியானால், ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய கட்டாயத்துக்கு அவர்களைக் கொண்டு வந்தது யார்? என்பதுதான் முதலில் எழுப்பப்பட வேண்டிய கேள்வி.
இலங்கையில் நீண்டநெடுங்காலமாக தமிழ் மக்கள் சிங்களப் பேரினவாதத்தால் நசுக்கப்படுகின்றனர்.
தமிழர்கள் சிறுபான்மை இனம் என்ற ஒரே காரணத்துக்காக இந்த நாட்டின் ஆட்சி அதி காரத்தின் உச்ச பதவிகளில் தமிழர்கள் இடம் பெற முடியாது.
தவிர, பெரும்பான்மை சிங்கள ஆட்சி யாளர்கள் விரும்பினால் மட்டுமே இந்த நாட் டில் தமிழ் மக்கள் வாழ முடியும் என்பதான நிலைமைகளும் உண்டு.
ஒவ்வொரு தடவையும் பேரினவாதம் கக் கிய இனவாதத் தீயில் எத்தனையோ ஆயி ரம் தமிழ் மக்கள் கருகிப் போயினர்.
இத்தகைய நிலையிலேயே தமிழ் இளை ஞர்கள் தங்கள் இனத்தின் – மக்களின் உரிமைக்காக, சுதந்திரத்துக்காக போராடினர். இதுவே உண்மை.
நடந்து முடிந்த ஆயுதப் போராட்டத்தில் தங்கள் உயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களை, தங்கள் பிள்ளைகளை தமிழ் மக்கள் நினைவு கூருகின்றனர்.
இந்த நினைவுகூரல் இந்த நாட்டின் தேசிய பாதுகாப்புக்கோ ஒற்றுமைக்கோ எந்தப் பங் கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.
மாறாக நினைவேந்தலுக்குத் தடை ஏற் படுத்தப்படுகின்றபோது மாவீரர்களை நினைவு கூருவதற்குக்கூட நம்மால் முடியவில்லை என்ற மனநிலை ஏற்படும்போது நாம் இன்ன மும் அடிமைப்பட்ட இனமாக இருக்கின்றோம் என்பதையே சுட்டி நிற்கும்.
ஒரு மாவீரனின் தாய் தன் பிள்ளையை நினைவேந்த முடியவில்லை என்றால், அது அந்தத் தாயிடம் ஏற்படுத்தக்கூடிய பதகழிப்பு – உளத் தாக்கம் – மனவேதனை எத்துணை என்பதை அனைவரும் புரிந்து கொள்வது அவசியம்.
இத்தகைய புரிந்துணர்வு இருக்குமாயின் மாவீரர் நாளுக்கு சிங்கள மக்களும் மதிப்புச் செலுத்துவதாக இருந்திருக்க வேண்டும்.
இதனையே துட்டகைமுனு தமிழ் மன்னன் எல்லாளனுக்குச் செலுத்திய கெளரவம் சுட்டி நிற்கின்றது.
ஆனால் சமகாலச் சிங்களத் தரப்பின் மனநிலை வேறுவிதமாக இருப்பதுதான் இங்கு வேதனையிலும் வேதனை.