தேர்தல் மணியோசைதனை கேட்டதாரோ இங்கு வந்ததாரோ…
Share
கோயில் மணியோசைதனைக் கேட்டதாரோ இங்கு வந்ததாரோ என்ற சினிமாப் பாடல் அந்தக் காலத்தில் அதிகமாக உச்சரிக்கப்பட்டது.
பழைய திரைப்படப் பாடல்களின் இசையும் இனிமையும் இன்றும் நெருட வைக்கும்.
அந்தளவுக்கு அந்தக் காலத்துச் சினிமாப் பாடல்கள் கருத்தாழம் மிக்கதாய் தத்துவத்தை கூறுவதாய் அமைந்தன.
இவை ஒருபுறமிருக்க, கோயிலுக்கு மட்டும் மணியோசை உரித்தன்று.
மாறாக அறிவித்தல்கள் வழங்குவதற்கும் ஆயத்தப்படுத்தல்களுக்கும் மணியோசை இசைக்கப்படுகின்ற நடைமுறை பன்னெடுங்காலமாக உள்ளது.
இந்த அடிப்படையில், பொதுத் தேர்தல் நடப்பதற்கான ஆயத்த மணியோசை கேட்கத் தொடங்கியுள்ளது.
பொதுத் தேர்தலை பிற்போடுமாறு உயர் நீதிமன்றில் முன்வைத்த மனுக்கள் நீதிமன் றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில்,
பொதுத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இதற்கு மேலாக, பொதுத் தேர்தலை விரைவில் நடத்தியாக வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
ஆக, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் தேர்தலை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என்ற தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரின் அறிவிப்பும் சேர்ந்து பாராளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதென்பது உறுதியாகிறது.
சுருங்கக்கூறின் தேர்தல் மணியோசை கேட்கத் தொடங்கியுள்ளது.
இங்கு யாருக்கேனும் தேர்தல் மணியோசை கேட்காமல் இருக்குமாயின் அதுதான் ஆபத் தானது.
ஏனெனில் பொதுத் தேர்தல் என்பது மக்கள் பிரதிநிதிகளைப் பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்காக நடைபெறும் தேர்தல்.
எனவே இங்கு பொதுமக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.
தேர்தல் மணியோசை கேட்டதன் காரணமாக வேட்பாளர்கள் வீறு கொண்டெழுந்து, விரைந்து பொதுமக்களாகிய உங்களைத் தேடி வருவார்கள்.
அவ்வாறு வருகின்றவர்கள் தொடர்பில் பொதுமக்கள் அறியாதவர்களாக இருப்பார் களாயின்; நல்லவர்களை, நேர்மையானவர்களை, விலை போகாதவர்களை மக்கள் பிரதி நிதிகளாகத் தெரிவு செய்ய முடியாமல் போகும்.
எனவே யார் வந்தாலும் அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்கத் தமிழ் மக்கள் தயா ராக வேண்டும்.
இதற்குப் பொதுமக்கள் தயாராக இல்லாத போது, நமக்கு நாமே பகையும் நமக்கு நாமே துன்பமுமாய் அமைந்து விடும்.
ஆகையால் தேர்தல் மணியோசைதனை கேட்டுக் கொள்ளுங்கள். அந்த மணியோசை கேட்டு இங்கு வருபவர்களிடம் உங்கள் அரசியல் தெளிவைத் தெரியப்படுத்துங்கள். இஃது வாக்கெடுப்பிலும் தெரியட்டும்.