தேர்தல் பிரசாரங்களை கடுமையாகக் கட்டுப்படுத்தினால்…
Share
ஜனநாயகத்தை நிலைப்படுத்துவதற்காக நடத்தப்படுவதே பொதுத் தேர்தலாகும்.
தேர்தல் வகைமைகள் வித்தியாசப்பட்டாலும் பொதுத் தேர்தல் என்பதே பாராளுமன்ற ஆட்சிக்கான வித்திடல்.
அந்த வகையில் இலங்கையின் பாராளுமன்ற அரசாங்கத்தை அமைப்பதற்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கெடு காலம்போல, பாராளுமன்றம் கலைக்கப்பட்ட கையோடு கொரோனாத் தொற்று உலகை உலுப்பி நிற்க,
பொதுத் தேர்தலை நடத்துவதில் ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாயிற்று.
இந்நிலையில் எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் பொதுத் தேர்தல் என்றால், மேடை போட்டு பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.
கூட்டம் எங்கு நடக்கிறதோ அந்த ஊர் முழுவதும் ஒலிபெருக்கி கட்டப்பட்டு தேர்தல் பிரசார உரைகள் கதறும்.
ஆனால் இம்முறை அதற்கான சந்தர்ப்பம் இல்லை எனலாம்.
வரையறுக்கப்பட்டவர்களின் பங்கேற்புடன் சமூக இடைவெளி பேணுவதும் முகக் கவசம் அணிந்தும் (மாஸ்க்) இருக்கக்கூடிய சூழ்நிலையில் பொதுக் கூட்டம் வைத்து பிரசாரம் செய் வது இயலாத விடயமாயிற்று.
இதுதான் என்றால், ஏலவே நடைமுறையில் இருக்கக்கூடிய சுவரொட்டிகள் ஒட்டுவதற் கான தடை என்ற விடயமும் மிக இறுக்கமாகப் பின்பற்றப்படுகிறது.
தேர்தல் பிரசார சுவரொட்டிகள் ஒட்டப்பட்டால் கைது செய்யப்படுவீர்கள் என்ற அறிவிப்பு சுவரொட்டிகளைக் கடுமையாகக் குறைத்துள்ளது.
இத்தோடு தேர்தல் பிரசார வரையறைகள் முற்றுப் பெறுகிறது என்றால் இல்லவே இல்லை.
தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய நேற்று முன்தினம் அதிரடியான ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன் பிரகாரம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தை மேற் கொள்ளும் பொருட்டு வீடு வீடாகச் செல்ல முடியாது.
வேண்டுமானால் கட்சி ஆதரவாளர்கள் மூவர் மட்டும் குறித்த நேர வரையறைகளுக் குள் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று பிரசாரம் செய்யலாம் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விதிக்கப்படுகின்ற கட்டுப்பாடுகள், வேட்பாளர்களின் கொள்கை விளக்கத்துக் கும் வாக்காளர் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதற்குமான சந்தர்ப்பத்தை இல்லா மல் செய்கிறது.
உண்மையில் தேர்தல் பிரசாரத்துக்கான வாய்ப்புகள் ஜனநாயகத்தின் இயங்கு நிலைக்குப் பேருதவி புரிகிறது என்பதால், தேர்தல் பிரசாரங்களை மக்கள் மத்தியில் முன் னெடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவது அவசியமாகும்.