Type to search

Editorial

தமிழ் மக்களின் ஆதங்கத்தை அடையாளப்படுத்துகின்ற கடிதம்

Share

தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடைவிதித்தமை தெரிந்ததே. நீதிமன் றத்தின் தீர்ப்புகள், உத்தரவுகள் விமர்சனத் துக்குரியவை அல்ல என்ற வகையில் மேற் படி விடயத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜ பக்­வினதும் பிரதமர் மகிந்த ராஜபக்­வின தும் கவனத்துக்குக் கொண்டுவருவதென தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாக முடிவு செய்துள்ளன.

இதன் பிரகாரம் தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுகூடி ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகி யோருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளன.

இவ்வாறு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மட்டுமன்றி சிங்கள மக் களும் கவனம் செலுத்த வேண்டும்.

ஏனெனில் இக்கடிதம் வித்தியாசமானது. உலகில் எந்தவொரு மக்கள் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்க முடியாத விடயத்தை உள்ளடக்கியுள்ளது.

இக்கடிதத்தில் தனிநாடு கோரப்படவில்லை. வடக்கு கிழக்கு இணைப்பை அங்கீகரியுங் கள் என்று கேட்கப்படவில்லை.

ஏன்? யுத்தத்தால் எல்லாம் இழந்து நிர்க் கதியாகியுள்ள தமிழ் மக்களின் துயரத்தைப் போக்குங்கள் என்றும் கூறப்படவில்லை. தமிழ் அரசியல் கைதிகளின் அவலத்தை, காணாமல்போனவர்களின் உறவுகள் படும் வேதனையை விபரிக்கவில்லை.

மாறாக உயிரிழந்த எங்கள் உறவுகளை நினைவுகூர அனுமதியுங்கள் என்பதற் காகவே இக்கடிதம் அனுப்பப்படுகிறது.

தன் உறவை, தன் இனம் சார்ந்தவனை, உலகுக்கே தியாகத்தை உணர்த்திய உத்த மனை, போரில் மரணித்த மறவர்களை, உறவுகளை நினைவுகூருவதற்கு அனுமதி யுங்கள் எனக் கேட்கின்ற கடிதம் இது.

இவ்வாறானதொரு கடிதம் அனுப்பப்படு கின்ற அளவிலேயே தமிழர்களின் வாழ்வும் இருப்பும் உள்ளதெனில், அதுபற்றி சிங்கள மக்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
இந்தச் சிந்தனைக்கு பெளத்த சிங்களப் பேரினவாதம் தடையாக இருந்தால், பரவா யில்லை. ஒரு கணம் நீங்கள் சிறுபான்மை யாகவும் தமிழர்கள் ஆளும் பெரும்பான்மை யாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

இந்தக் கற்பனை கூட உங்களைக் கடுமை யாக வாட்டிக் கொள்ளும். ஏற்க மறுக்கும். பொறுத்துக் கொள்ளுங்கள். இந்தக் கற் பனையில் மரணித்துப் போன உங்கள் உறவு களை, இனப்பற்றாளர்களை, போரில் உயிர் நீத்தவர்களை நினைவுகூர முடியாது என்று தமிழர் அரசு அறிவித்தால் உங்களுக்கு எப் படியிருக்கும்.

கற்பனையிலும் ஜீரணிக்க முடியாத கொடுமை என்று நீங்கள் சொல்வீர்கள். அந்தக் கொடுமையை தமிழ் மக்கள் தமது நிஜவாழ்வில் சதா அனுபவிக்கின்றனர்.
ஒவ்வொரு நினைவேந்தலுக்கும் தடையும் படையும் என்றால் நாம் என்ன செய்ய முடியும்.

எனவே தமிழ் அரசியல் தலைவர்கள் ஒப்ப மிட்டு அனுப்புகின்ற இக்கடிதம் தமிழ் மக் களின் மன ஆதங்கத்தின் அடையாளம்.

ஆகவேண்டியதைச் செய்வதே இன ஒற்றுமைக்கான ஆதாரமாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link