தமிழ் இனத்தை தொடர்ந்து வஞ்சிக்க நினைக்காதீர்கள்
Share
எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர்நாள். விடுதலைப் போராட்டத்தில் ஆகுதியான மாவீரர்களை நினைவுகூருகின்ற நாளாக அதனைத் தமிழ் மக்கள் பிரகடனம் செய் துள்ளனர்.
இந்த மண்ணில் விடுதலைப் போராட்டம் நடந்ததை எவரும் மறப்பதற்கும் மறுப்பதற் கும் இல்லை.
விடுதலைப் புலிப் போராளிகளுக்கும் அரச படைத்தரப்புக்குமிடையே நடந்த சண்டையில் போராளிகளும் படைத்தரப்பினரும் உயிரி ழந்தனர் என்பதும் இங்கு உண்மைத் தகவல் கள்.
விடுதலைப் புலிகள் பலத்துடன் இருந்த காலத்தில், அவர்களுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்தப் பேச்சுவார்த்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக நடந்தபோது, சமாதானத் துக்கான பேச்சுவார்த்தையாக அது பகிரங்கப்படுத்தப்பட்டது.
தவிர, யுத்த காலத்தில் விடுதலைப் புலி களால் சிறைப்பிடிக்கப்பட்ட படையினரை விடு விப்பதற்காகவும் படையினரால் பிடிக்கப்பட்ட போராளிகளை மீட்பதற்காகவும் படையினரும் விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தை நடத்தி கைதிகளைப் பரிமாற்றம் செய்த சம்பவங்களும் நடந்தன.
கால நீட்சியும் பூகோள அரசியல் மாற்றங் களும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட் டத்துக்குப் பாதகமாக அமைந்ததுடன் அண்டை நாட்டுப் பகைமையும் சேர்ந்து விடுதலைப் புலிகள் அமைப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தன.
இதனை போரின் வெற்றியாக அரசாங்கம் கொண்டாட, தமிழ் மக்கள் தங்களின் பலத்தை இழந்து துன்பத்துக்கு ஆளாகினர்.
இங்கு, விடுதலைப் புலிகள் அரசாங்கத்தை எதிர்த்துப் போர் நடத்தியதாகப் பார்ப்போர்; அதற்கான காரணம் என்னவென்று இம்மியும் சிந்தித்திலர்.
உண்மையில் இந்த நாட்டில் தமிழ் மக்கள் திட்டமிட்டு நசுக்கப்பட்டனர். கல்வி, பொருளா தாரம் என அனைத்து வகையிலும் வஞ்சிக்கப்பட்டனர்.
காலத்துக்குக் காலம் அவர்கள் மீது வன் முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.
இந்நிலையில்தான் தமிழ் இனம் தனது எதிர்கால வாழ்வு பற்றிச் சிந்தித்தபோது, அகிம்சைப் போராட்டங்களை தமிழ் அரசியல் தலைவர்கள் முன்னெடுத்தனர்.
அவை அனைத்தையும் பேரினவாதத் தீ எரித்துவிட, சேர்ந்து வாழ்வதற்கு நாங்கள் தயாராக இருந்தாலும் பேரினவாதிகள் தயா ரில்லை என்ற கட்டத்தில், பிரிந்து வாழ்வதே வழி என்று தமிழ் இனம் முடிவு செய்தது. இதுவே உண்மையும் சத்தியமுமாகும்.
நிலைமை இதுவாக இருக்கையில், மாவீ ரர்களை நினைவுகூருவது கூடத் தடுக்கப் படலாம் என்ற நிலைமை எம் இனத்தின் நினைவேந்தல் உரிமையை நிராகரிப்பதாகும்.
ஆக, தமிழ் இனத்தைப் பழி தீர்ப்பது என்ற எண்ணத்தை விடுத்து ஒரு சுமுகமான சூழ மைவை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் தார் மீகக் கடமையாகும்.