தனியயாரு சிங்கமாய் நின்று கர்ச்சிக்கும் தமிழனைப் பார்
Share
நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் ஆற்றிய கன்னியுரையில்; இந்த நாட்டின் மூத்த குடிகளின் தாய்மொழி தமிழ் என்ற உண்மையைக் கூறியதால் சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வெகுண்டெழுந்துள்ளனர்.
இதனைப் பார்க்கும்போது இந்தச் சின்னத் தனமானவர்களை என்ன செய்வது என்றே எண்ணத் தோன்றும்
அதிலும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்த சஜித் பிரேமதாஸ தரப்பினரே நீதியரசர் விக்னேஸ்வரனை எதிர்ப்பதில் கங்கணம் கட்டி நிற்கின்றனர் எனும்போது, இதற்குள் இருக்கக்கூடிய சூக்குமம் என்ன என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும்.
இதுதவிர, கட்சித் தலைவர்களுக்கு முன்வரிசை என்ற அடிப்படையில் நீதியரசர் விக் னேஸ்வரனுக்குப் பாராளுமன்றத்தில் முன்வரிசை வழங்கப்பட்டுள்ளது.
இதைப் பொறுக்க முடியாத சிங்கள பேரினவாதப் பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதியரசர் விக்னேஸ்வரனைப் பின்வரிசைக்கு இடம் மாற்ற வேண்டுமெனத் துள்ளிக் குதிக்கின்ற னர்.
தமிழ் மக்கள் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் என்பதைப் பாராளுமன்றத்தில் கூறுகிறார் என்ற ஒரே காரணத்துக்காக விக்னேஸ்வரன் முன்னாசனத்தில் இருப்பதைச் சிங்கள எம்.பிகள் சிலரால் பொறுக்க முடியவில்லை எனில், தமிழர்கள் எவரேனும் ஜனாதிபதியாக, பிரதமராக இந்த ஜென்மத்தில் வர முடியுமா என்ன?
இவையயல்லாம் எதிர்பார்க்கப்பட்டவை தான். எனினும் நீதியரசர் பாராளுமன்றத்தில் ஆற்றுகின்ற மிகக் காத்திரமான உரை களுக்கு சிங்களத் தரப்பினர் என்றோ பதில் கூறித்தானாக வேண்டும்.
அதேநேரம் அவர்களின் இனவாதக் கோசங்களைக் கண்டு விக்னேஸ்வரன் ஒரு போதும் அஞ்சப் போவதில்லை.
அவரின் உரை இன்னும் இன்னும் சிங்கள எம்.பிக்களுக்கு உறைக்கச் செய்யும். அந்த உறைப்புத் தாங்க முடியாமல் கோசம் போடுவர். கத்திக் குளறுவர். துள்ளிக் குதிப்பர். பாராளுமன்றம் அமளி துமளிப்படும். இதெல்லாம் நடக்க வேண்டும்.
தனியயாரு தமிழன் இலங்கைப் பாராளு மன்றத்தில் சிங்கம் போல கர்ச்சிப்பது கண்டு சர்வதேசம் திரும்பிப் பார்க்க வேண்டும். நிச்சயம் திரும்பிப் பார்க்கும்.
இவை ஒருபுறமிருக்க, எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் தனிலும் விக் னேஸ்வரனுக்கு ஆதரவாக எழுந்து கதைக்க வில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.
அதிலும் தமிழ் எம்.பிகள் சிலர் பாராளுமன்றத்துக்கே செல்லாமல் தவிர்த்தனர் என்றால், எங்கள் தமிழ் எம்.பிகளை என்ன சொல்வது. என்ன செய்வது.