குறைந்த வட்டிக் கடன்களை மறைப்புச் செய்யும் வங்கிகள்
Share
வடமாகாணத்தில் இயங்கக்கூடிய அநேகமான வங்கிகள் குறைந்த வட்டிக் கடன்களை மறைப்புச் செய்கின்ற மிக மோசமான செயலைச் செய்வதாக புத்திஜீவிகளும் சமூக நலன் மீது அக்கறை கொண்டவர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.
பொதுவில் வட மாகாணத்தில் இயங்குகின்ற அநேகமான வங்கிகள் தென்பகுதியில் உள்ள தலைமைகளுக்கு விசுவாசமாக நடந்து கொள்வதையும் அதனூடாகப் பதவி யுயர்வுகளைப் பெற்றுக் கொள்கின்ற ஏற்பாடு களையும் செய்வதில் தீவிரம் காட்டுகின்ற னவே தவிர,
போரினால் பாதிக்கப்பட்ட வடபுலத்துத் தமிழ் மக்கள் குறைந்த வட்டியில் கடன்களைப் பெற்று சுயமுயற்சிகளில் ஈடுபடவோ அன்றி விவசாயம், கைத்தொழில், வர்த்தக முயற்சி களில் ஈடுபடுவதற்கோ சந்தர்ப்பம் வழங்குவதில்லை.
தவிர, வடபுலத்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகக் குறைந்த வட்டிக் கடன்களை எம் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கருதுகின்ற வங்கி உத்தி யோகத்தர்களின் கருத்துக்களை உதாசீனம் செய்கின்ற அளவிலேயே நிலைமை உள்ள தாகவும் கூறப்படுகிறது.
மாறாக, உயர்ந்த வட்டி வீதத்தைக் கொண்ட கடன்களை வங்கி அலுவலகங்களில் விளம் பரப்படுத்தியும் வர்த்தகர்களுக்குத் தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியும் உயர்ந்த வட்டி வீதத்தைக் கொண்ட கடன்களை வழங்குவதில் வடபகுதியில் இயங்கும் அநேகமான வங்கிகள் முனைப்புக் காட்டுவதால், வடபகுதி மக்களின் உழைப்பும் ஊதியமும் வட்டி என்ற பெயரால் கறந்தெடுக்கப்படுகிறது என்ற கருத்துக்களையும் புத்திஜீவிகள் முன்வைத்துள்ளனர்.
இதற்கு மேலாக வடபகுதியில் இயங்கும் விவசாயத் திணைக்களம் போன்ற அமைப் புகள் விவசாய முயற்சிகளுக்காக வழங்கப்படும் சலுகைக்கடன்களை வடபகுதி விவசாயி களுக்குப் பெற்றுக் கொடுக்கவோ அன்றி குறித்த தகவல்களை விவசாயிகளுக்குத் தெரியப்படுத்துவதிலோ கவனம் செலுத்துவதில்லை.
நிலைமை இதுவாக இருக்கையில் வட பகுதியில் உள்ள வங்கிகளும் விவசாயக் கடன் பற்றிய அறிவித்தல்களை வெளிப்படுத் தாத நிலையில், மிகக்குறைந்த வட்டி வீதத்தை உடைய கடன்கள் எதுவும் வட பகுதி மக்களுக்குக் கிடைக்கவில்லை.
இதன்காரணமாக மேற்குறிப்பிட்ட வட்டி குறைந்த கடன்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி யின் முழுமையும் தென்பகுதி மக்களுக்கே சென்றடைகிறது.
எனவே இத்தகைய நிலைமைகளை மாற்றியமைக்க வடபகுதியில் இயங்கும் வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் நம் மக்கள் சார்ந்த கோரிக்கையாகும்.