கட்சி சாராத அரசியலை தமிழ் மக்கள் அறிமுகம் செய்ய வேண்டும்
Share
இது எனது கட்சி. என் தந்தை, அவர் தந்தை எனத் தொன்று தொட்டு இந்தக் கட்சியே எங்களுடையது என்ற அரசியல் கட்சிப் பண்பாடு இனிப் பொருத்தமில்லை என்பதை ஏற் றுத்தானாக வேண்டும்.
ஒரு காலத்தில் தொகுதி வாரியாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட போது கட்சி ஆதரவு என்பது ஏற்புடையதாக இருந்தது.
ஆனால் இவர் எங்கள் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் என்ற நிலைமை மாறி, விகி தாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறைமை நடைமுறைக்கு வந்த பின்னர், விருப்பு வாக்குகளே பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்கின்றது.
இவ்வாறான நிலைமையில் ஒரு கட்சிக்கான ஆதரவு என்ற நிலைமைகள் தன்னிச் சையான செயல்பாட்டுக்கும் சர்வாதிகாரப் போக்குக்கும் வழிசமைப்பதாக உள்ளது.
இஃது மக்களுக்கு ஆரோக்கியமான தல்ல என்ற நிலையில், கட்சிக்கான ஆதரவின்றி மக்களுக்கு சேவை செய்யக்கூடிய வர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் அவர்களைத் தெரிவு செய்தல் என்ற புதியதொரு அரசியல் பண்பாடு நடைமுறைக்கு வருகின்றது.
இப் புதிய அரசியல் பண்பாடு முறைமை தென்னிலங்கையில் அமுலாகியுள்ளது.
இந்த அமுலாக்கத்தினூடாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்ற இரு பிரதான தேசியக் கட்சிகள் தத்தம் ஆதர வாளர்களை இழந்து நிற்பதைக் காண முடியும்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பொதுஜன பெரமுனவுடன் சேர்ந்து பயணிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதில் ஐக்கிய தேசியக் கட்சி முற்று முழு தாகத் தனது ஆதரவாளர்களை இழந்து கடந்த பொதுத் தேர்தலில் ஓர் ஆசனத்தைக் கூடப் பெற முடியவில்லை.
மாறாக, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறிய சஜித் பிரேமதாஸ தலைமையில் உருவான ஐக்கிய மக்கள் சக்தி எதிர்பார்த் ததைவிட கூடிய ஆசனங்களைப் பெற்றுள்ளது.
ஆக, நாங்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி யின் ஆதரவாளர்கள் அல்லது ஐக்கிய தேசி யக் கட்சியின் ஆதரவாளர்கள். ஆகையால் அந்தக் கட்சிகளை விட்டு நாங்கள் ஒரு போதும் விலகமாட்டோம் என்ற முன்னைய நிலைப்பாடுகள் இப்போது சிதறுண்டு கட்சி ஆதரவு என்ற மரபு கடந்து, செயல்திறன் மிக்கவர்கள் எங்குள்ளனரோ அவர்களுக்கு வாக்களிப்பது என்ற நிலைமை தென்பகுதி அரசியலில் அமுலாகியுள்ளது.
எனினும் எங்கள் தமிழர் தாயகத்தில் அதன் அமுலாக்கம் இயங்க ஆரம்பித்து விட்டதையும் அதன் அறிகுறியே கடந்த பொதுத் தேர்தல் முடிவுகள் என்பதையும் நாம் சுட்டிக் காட்ட முடியும்.
எனினும் இங்கு ஒரு விடயத்தை நாம் கூறித்தானாக வேண்டும்.
அதாவது தமிழ் மக்கள், கட்சி ஆதரவு என்ற கலாசாரத்தை விலத்தி நின்று வாக் களித்திருந்தாலும் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவர்கள் மக்களின் மனநிலையை உணர்ந்து கொள்ளாமல், தங்கள் கட்சிகளுக் குக் கிடைத்த ஆதரவாகவே அதனைக் கருதுகின்றனர்.
இதன் விளைவு மீண்டும் கட்சி அரசியல் கலாசாரம் ஏற்படப் பார்க்கிறது என்பதால் அடுத்த தேர்தலில் தமிழ் மக்கள் கட்சி அரசியல் என்பதற்கு தக்க பாடம் புகட்டி, உரியவர் களுக்கு மெய்ஞானத்தைப் போதிக்க வேண்டும்
மெய்ஞானம் என்பது தோல்வியால் ஏற்பட்டதான வரலாறுகளே அதிகம்.