எடுக்கின்ற தீர்மானங்களை தெளிவாக தெரியப்படுத்துங்கள்
Share
“தெளிவு” என்ற தமிழ்ச் சொல்லின் மகி மையை பலரும் உணராதிருப்பது வேதனைக் குரியது.
தெளிவு என்பது ஒருவரின் நிதானத்தை, அறிவாற்றலை, விடயப் பொருள் மீது அவரி டம் இருக்கின்ற புலமையைச் சுட்டி நிற்பதாகும்.
இங்கு பேசுவதில், எழுதுவதில், கருத்துரைப்பதில், அச்சுப்பதிப்புச் செய்வதில் என தெளிவு என்ற உயர் சொல், ஆட்சி செய்கிறது.
இதனாலேயே தெளிவு என்ற சொல்லை வள்ளுவன் தன்குறளில் பதிவு செய்தான்.
தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும்…
என்ற குறளில் தெளிவு என்பது தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
பாண்டிய மன்னன் கோவலனைக் கொண்டுவா என்று கூறியது கொன்றுவா எனக் குழப்ப முற்றபோது, பாண்டிய மன்னன் இறக்க நேர்ந்தது. பாண்டிமாதேவி உயிர்துறந்தாள். பாண்டியநாடு எரிந்தது.
இவை தெளிவு இல்லாத வார்த்தைகளால் வந்த நாசம் என்பது உணர்தற்குரியது.
இதுதவிர, தெளிவற்ற வார்த்தைகளும் தெளிவற்ற அவதானங்களும் பல குடும்பங்களில் குழப்பங்களை ஏற்படுத்தியிருப்பதை நாம் அவதானிக்க முடியும்.
எனவே எந்த இடத்தும் தெளிவு என்பது மிகவும் கவனிக்கப்பட வேண்டும்.
இருந்தும் கொரோனாத் தொற்றுத் தொடர்பில் அரசாங்கத்தால் எடுக்கப்படுகின்ற தீர் மானங்கள் குழப்பத்துடனேயே மக்களைச் சென்றடைகின்றன.
சொற் தெளிவின்மை, மொழி பெயர்ப்புக் குழப்பம், வசனம் அமைப்பதில் ஏற்படுகின்ற இடர்பாடுகள் என்பன மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி விடுகின்றது.
அதிலும் ஊரடங்குச் சட்டம் அமுலாவதும் தளர்த்தப்படுவதும் தொடர்பில் மக்களிடையே ஏற்படும் குழப்பம் சொல்லிமாளா.
ஊரடங்குச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையயான் றில், தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் மக்கள் நடமாட முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பு கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை ஆகிய நான்கு மாவட்டங் களுக்கே பொருந்தும் என்றே மக்கள் கருதினர்.
ஆனால் ஜனாதிபதி செயலக ஊடகப்பிரிவு இலங்கை முழுமைக்குமான அறிவிப்பாகவே அதனை வெளியிட்டிருந்தது.
எனினும் இந்த அறிவிப்பு தெளிவற்ற தாகவே இருந்தது.
ஆக, எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள், அவை தொடர்பில் வெளியிடப்படுகின்ற அறிவிப்புகள் தெளிவாக இருப்பது மிகவும் முக்கியமானது.
அதேநேரம் இத்தகைய அறிவிப்புக்களை அவசரப்பட்டு வெளியிடுவதில் அதி தீவிரம் காட்டுகின்ற ஊடகங்கள், குறித்த தகவல்கள் தெளிவாக இருக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துவது மக்கள் குழம்பாமல் இருப்பதற்குப் பேருதவியாக அமையும்.