எங்கள் தொல்லியல் பறிபோகப் போகிறதா?
Share
தமிழ் மக்கள் தொடர்பில் இலங்கை ஆட்சியாளர்களின் வன்மம் இன்னமும் தீர்ந்த பாடில்லை
வன்னிப் பெருநிலப்பரப்பில் தமிழினத்தை வதைத்து சங்காரம் செய்தும் அவர்களின் பகைமை அடங்கவில்லை எனும்போது,
தமிழினத்தின் எதிர்காலம் இன்னும் ஆபத்தாகவே இருக்கப் போகிறது.
வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு மேலாக, யுத்தப் பாதிப்புகளின் வடுக்களோடு வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் தமிழ் மக்கள் என தமிழினம் சொல்லொணாத் துயரத்தில் மூழ்கிக் கிடக்கிறது.
யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகள் கடந்தும் இன்னமும் எமக்கான தீர்வு சாத்தியமாக வில்லை.
தவிர, தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கான தந்திரோபாயங்களை எங்கள் அரசியல் தலை மைகள் மேற்கொள்ளவுமில்லை.
நிலைமை இதுவாக இருக்கையில், இப்போது ஈழத் தமிழர்களின் வரலாற்றுத் தொன் மங்களைத் தமக்குரிய தாக்குகின்ற மிகப் பெரும் திட்டம் தயாராகி வருவதை உணர முடிகின்றது.
அதாவது, இலங்கையின் ஆதிக்குடிகள் தமிழர்கள் என்பதைச் சான்றுப்படுத்தும் ஆதா ரங்களை சிங்களத் தரப்புக்காக்குவது அல்லது அதன் அடையாளங்களை அறுத்துவிடு வது என்ற வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
இத்திட்டத்தை அமுலாக்குகின்ற பொறுப்புக்கள் பெளத்த பிக்குகளிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளதையும் நாம் உணர முடிகின்றது.
ஆம், முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் ஆட்சி உரிமை செலுத்த முற்பட்டது முதல், திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் பெளத்த விகாரை அமைக்கும் முயற்சி என்பதுவரை தமிழர்களின் தொல்லியலை கபளீகரம் செய்கின்ற வேலையாகும்.
இதன் இன்னுமோர் கட்டமே வடக்கு கிழக்கில் உள்ள தொல்லியல் சார்ந்த வழக்குகளை கொழும்புக்கு மாற்றவேண்டுமென ஜனாதிபதி கோட்டாபயவிடம் பெளத்த பிக்குகள் முன் வைத்த கோரிக்கையாகும்.
வடக்கு கிழக்கில் இருக்கக்கூடிய தொல்லியல் சார்ந்த வழக்குகளை வடக்கு கிழக்கில் உள்ள நீதிமன்றங்களில் நடத்துவதுதான் நீதியானது.
எனினும் அதனை அனுமதிக்க முடியாது என்பதுபோல அந்த வழக்குகளை கொழும் புக்கு மாற்றுமாறு பெளத்த பிக்குகள் கேட்பதற்குள்; தமிழ் மக்களை அவர்கள் எப்படியயல் லாம் வஞ்சிக்கவும் அடிமைப்படுத்தவும் நினைக்கிறார்கள் என்பது தெட்டத் தெளிவாகிறது.
எதுவாயினும் இந்த நாட்டின் அனைத்து இன மக்களையும் சமகண் கொண்டு பார்ப்பது ஜனாதிபதியின் கடமை என்ற அடிப்படையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் எடுக்கின்ற முடிவுகள் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதாக இருக்கும் என நம்பலாம்.