எங்களிடம் இல்லாதுபோன நயத்தக்க நாகரிகம்
Share
என் எதிராளி எதைச் செய்தாலும் அதை எதிர்ப்பதுதான் என் கடமை என்று யார் நினைத் தாலும் அஃது பெரும் பிழையாகவே முடியும்.
ஒருமுறை கர்மவீரர் காமராஜர் அவர்களின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடந்து கொண்டி ருக்கிறது.
காங்கிரஸ் தொண்டர் ஒருவர் மேடையில் உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.
அவரின் உரை பேரறிஞர் அண்ணாதுரையை கிண்டல் செய்வதாக இருக்கிறது.
இவ்வாறு பேரறிஞர் அண்ணாதுரையை தாக்கிப் பேசினால் அஃது காமராஜருக்கு மகிழ்வாக இருக்கும் என்ற நினைப்பிலேயே அந்தத் தொண்டர் அவ்வாறு பேசினார்.
அந்நேரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் கர்மவீரர் காமராஜர் எழுந்து, பேச்சை நிறுத்து மாறு கண்டிப்பாக உத்தரவிடுகின்றார்.
மேடையில் இருந்தவர்களும் சபையோரும் திகைத்துப் போயினர்.
காமராஜர் ஒலிவாங்கிக்கருகில் வருகிறார். குறித்த நபர் அண்ணாதுரைக்கு எதிராகப் பேசியது குறித்து வேதனை அடைகிறேன் என்று கூறிவிட்டு அமர்ந்த காமராஜர்; அண்ணாவைத் தாக்கிப் பேசிய தொண்டரை அழைத்து எச்சரிக்கை செய்கிறார்.
அறிஞர் அண்ணாதுரையை விமர்சிப் பதற்கு உனக்கு தகுதி உண்டா? அவர் எத் தகைய பேரறிஞர். அவரைத் தாக்கிப் பேசு வதற்கும் ஓர் இங்கிதம் இருக்க வேண்டும் எனக் கடிந்து கொள்கிறார்.
கர்மவீரர் போன்ற தலைவர்களுக்கு இனி நாம் எங்கு போவது.
எவருக்கும் எதுவும் சொல்லலாம். எப்படியும் தூற்றலாம். வசைபாடலாம் என்றதொரு வழக்கத்துக்குள் நாம் ஆளாகி விட்டோம். இனி அதனின்றும் மீண்டெழுந்து காமராஜர் போன்ற பெருந்தலைவர்கள் காட்டிய பாதையில் நடப்பதென்பது சாத்தியப்படப் போவ தில்லை.
இதில் வேதனையயன்னவென்றால், பெரிய வர்கள் செய்கின்ற சின்னத்தனமான விமர் சனங்கள் எங்கள் இளம் சந்ததியினரை – மாணவர் சமூகத்தைக் கடுமையாகப் பாதித்து விடுகின்றது.
எப்படியும் பேசலாம். நாக்கூசாமல் குற்றம் சுமத்தலாம். வசைபாடலாம் என்ற நிலைமை வந்த பின்பு, எங்கள் மாணவர்களை வழிப் படுத்துவது எங்ஙனம் என்பதுதான் நம்முன் இருக்கின்ற பெரும் பிரச்சினை.
எதுஎவ்வாறாயினும் நடந்து முடிந்த பொதுத் தேர்தலின்போது நம் அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் செய்த தேர்தல் பிரசாரம் என்பது சாக்கடைச் சேற்றை மற்ற வர்கள் மீது வாரி வீசுவது போல் இருந்தது.
பதவிக்காக எப்படியும் மற்றவர்களைத் தூற்றலாம், எந்த அதர்மத்தையும் செய்யலாம் என்பதான அவர்களின் மனநிலை பட்டவர்த் தனமாக வெளிப்பட்டது.
ஆக, இத்தகையவர்கள் பதவியைப் பெற்றால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை ஊகிப்பது கடினமன்று.