ஊருக்கே உபதேசம் படையினருக்கு அல்ல…
Share
கொல்லாமை பற்றி ஒருவர் போதனை செய்து கொண்டிருக்கின்றார்.
உயிர்களைக் கொல்வது மாபாவம். இந்த உலகத்தில் எல்லா உயிர்களும் யாரைக் கையயடுத்து வணங்கும் என்று வள்ளுவரிடம் கேட்டால் உயிர்களைக் கொல்லாதவர்களை, புலால் உண்ணாதவர்களை எல்லா உயிர் களும் கையயடுத்து தொழும் என்பார்.
எனவே நாமும் பிற உயிர்களைக் கொல்லா திருக்க வேண்டும் என அவரின் போதனை நீண்டு செல்கிறது.
இவ்வாறு உரை ஆற்றியவர் உரையாற்று வற்கு முன்னதாக இறைச்சிக்காக வீட்டில் நின்ற சேவல் ஒன்றைப் பிடித்து கூட்டில் அடைத்து வைத்திருந்தார்.
தன் கணவன் கொல்லாமை பற்றி உரை யாற்றுவதை வீட்டில் இருந்து செவிமடுத்த அவ ரது மனைவி என் கணவர் திருந்தி விட்டார். இனி அவர் புலால் உண்ணமாட்டார் என்று நினைத்து கூட்டில் அடைத்து வைத்திருந்த சேவலைத் திறந்து விட்டார்.
போதனை முடித்து வீட்டுக்கு வந்த கணவன் தான் அடைத்து வைத்த சேவலைப் பிடிக்கச் செல்கிறார்.
அங்கே கூடு திறந்து கிடக்கிறது. சேவலைக் காணவில்லை. கடும் கோவப்பட்ட அவர் தன் மனைவியிடம் சேவல் எங்கே? என்று கேட்கிறார்.
அதற்கு நீங்கள் தானே கொல்வதும் புலால் உண்பதும் மாபாவம் என்று போதனை செய் தீர்கள்.
அதனால் இனி நீங்கள் புலால் உண்ண மாட்டீர்கள் என்று நினைத்து சேவலைத் திறந்து விட்டு விட்டேன் என்கிறார் மனைவி.
இதைக் கேட்ட கணவன் அது ஊருக்குச் செய்த உபதேசம். உனக்கல்ல என்று பதில் அளித்தார்.
இதை நாம் கூறும்போது எதற்காக இந்தக் கதை இங்கு என்று நீங்கள் யாரேனும் கேட்க லாம்.
அவ்வாறு கேட்டால் அந்த உபதேசம் போலத் தான் இலங்கையில் கொரோனாத் தொற்றுத் தொடர்பான போதனைகளும் உள்ளன
.
ஆம், இலங்கையில் கொரோனாத் தொற்றைத் தடுப்பதற்கான பணியில் படைத்தரப்பினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனாவைத் தடுப்பதற்காக மக்களை வீடுகளில் இருக்குமாறும் தேவையில்லாமல் வெளியிடங்களுக்குச் செல்லாமல் இருக்கு மாறும் படையினர் போதிக்கின்றனர்.
இவ்வாறு மக்களுக்குப் போதனை செய்யும் படையினர் அந்தப் போதனை ஊருக்கல்லாது தங்களுக்கல்ல என்று நினைத்தனர் போலும்.
அதனால்தான் விடுப்பில் சென்ற படைத் தரப்பினர் நண்பர்களிடம் உறவுகளிடம் ஊர் விட்டு ஊர் என எங்கும் சென்று கொரோனாத் தொற்றைத் தேசமெல்லாம் பரவும் வகை செய்துள்ளனர்.
என்ன செய்வது ஊருக்குச் செய்த உப தேசத்தை இவர்களும் பின்பற்றி இருந்தால் இந்த அபத்தம் ஏற்பட்டிருக்க மாட்டாது.