உடன்பிறந்தே கொல்லும் வியாதி
Share
தமிழ் இனம் தொடர்பில் ஆய்வு செய்த டாக்டர் மு.வரதராசனார் எம் இனத்தின் தாழ்வு நிலைக்குரிய காரணங்களைக் கண்டறிந்தார்.
போட்டி, பொறாமை, காட்டிக்கொடுப்பு என்பன நம் இனத்தின் பகை வேர்கள் என்பது அவரின் முடிவு.
அதாவது தமிழினத்துக்கு எதிரி வெளியில் இல்லை. நம் இனத்துக்குள்ளேயே நமக்கான எதிரி இருக்கின்றான் என்பது டாக்டர் வரதராசனாரின் முடிவில் இருந்து நாம் கண்டறி யக்கூடிய உண்மை.
எதிரி நமக்குள் இருந்தால் பகைவனை வெல்வது முடியாத காரியம்.
இதனாலேயே தமிழினம் அன்று முதல் இன்றுவரை இழப்புக்களைச் சந்திக்கின்ற துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகி இருக்கிறது.
ஆம், இனி யாராலும் முடியாது என்று உலகு வியக்கக்கூடிய விடுதலைப்போராட்டத்தை நடத்தியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்.
விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் என்பது சிங்கள இனத்துக்கு எதிரான போராட் டம் அல்ல. மாறாக அது ஈழத் தமிழினத்தின் வாழ்வுக்கானது.
விடுதலைப் புலிகள் நடத்திய ஆயுதப் போராட்டம் உலகளவில் வியக்க வைத்தது எனில், அதற்கு அவர்களிடம் இருந்த ஆயுத பலம் காரணமன்று.
மாறாக; அவர்களின் தியாகம், ஒழுக்கம், உயிரினும் மேலாகத் தம் தமிழ் இனத்தை நேசித்தமை என்பனவே காரணமாகும்.
விடுதலைப் புலிகளின் போராட்டத்தை உலக அரசியல் ஆய்வாளர்கள் வியந்து கூறியுள்ளனர்.
அதுமட்டுமல்ல, சிங்களத் தலைவர்களும் விடுதலைப் புலிகளின் தியாகத்தைப் போற்றி யுள்ளனர்.
வட பகுதிக்கு வருகை தரும் சிங்கள மக்கள், தலைவர் பிரபாகரனின் வீட்டுக்குச் சென்று அவர் வாழ்ந்த நிலத்து மண்ணை எடுத்துச் செல்வதைத் தங்களின் பேறாகக் கருதுவர்.
பிரபாகரன் மாவீரன் என இலங்கையின் படைத்தரப்பு பகிரங்கமாகக் கூறிய சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு.
என்ன செய்வது காலப்பிழைப்போல உலகம் நம்மோடு பகைத்துக் கொள்ள ஓர் உன்னத விடுதலைப் போராட்டம் வீழ்ச்சி கண்டது.
உண்மையில் ஆயுதப் போராட்டம் சரியா? என்று யாரேனும் கேட்டால், அதற்கான மறுத் தான்; ஆயுதப் போராட்டம் ஏன் ஏற்பட்டது என்பதாக இருக்க வேண்டுமேயன்றி, நடந்து முடிந்த ஆயுதப் போராட்டத்தை நியாயமற்றதாக்குவது ஒட்டுமொத்தத் தியாகத்தையும் குழி தோண்டிப் புதைப்பதாகும்.
எனவே நாங்கள் வாழ அவர்கள் உயிர் விட்ட தியாகத்தை எச்சந்தர்ப்பத்திலும் எவரும் ஊறு செய்து விடக்கூடாது.
இதனை விடுதலைப் புலிகளின் எதிரிகள் கூடச் செய்யலாகாது.
ஏனெனில் அவர்கள் இன்று இல்லை. அவர்கள் இல்லாதவிடத்து குற்றம் கூறுவது அறமன்று.