Type to search

Editorial

இன்னும் எத்தனை எத்தனை உசுப்பேத்தல்கள் இறைவா!

Share

தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படியாகும் என்று தவத்திரு யோகர் சுவாமிகளிடம் கேட்ட போது, அவர் கண்ணீர் விட்டு அழுததான சம்பவத்தை நம் முன்னவர்கள் சொல்லக் கேட்டுள்ளோம்.

இதுபோல தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என தந்தை செல்வநாயகம் அவர்கள் கூறியது பலருக்கும் தெரிந்த விடயமே.

ஆக, ஈழத் தமிழினத்தின் அவலம், தீராத நோய் என்பதை ஒரு மெய்ஞானியும் ஓர் அரசியல்ஞானியும் கூறிவைத்துள்ளனர்.

இப்போது தமிழ் அரசியல்வாதிகள் சிலர் கூறுகின்ற தகவல்களைக் கேட்கும் போதெல் லாம் எங்கள் இனத்தை நம்மவர்களே இப்படி ஏமாற்றுகிறார்களே என்று நினைக்கும்போது, அழுவதைவிட வேறு என்னதான் செய்ய முடியும்.

எத்தனை உயிர்கள் பிரிந்து போயின. எத்தனை அவலங்கள், எத்தனை இழப்புகள், எத்தனை அவமானங்கள், வாழமுடியாத சோகங்கள் இப்படியயல்லாம் ஆற்றலையும் ஓர் இனத்தின்; சில அரசியல் தரப்புகள், தமிழ் மக்களிடம் முன்வைக்கின்ற கருத்துக்களை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.

அத்தனையும் அப்பட்டமான பொய், ஏமாற்று நாடகம்.

கடவுளே! இப்படியயாரு இனப்பற்றற்ற கூட்டம் நம்மத்தியில் இருக்கும்போது மீட்சி என்பது எம் இனத்துக்கு எப்படிக் கிடைக்கும்.

அதிலும் ஒரு அரசியல் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு விட்டு, அதற்கு தென்பகுதியில் எதிர்ப்பு எழுந்துள்ளதாகக் காட் டப்படும் காட்சி இருக்கிறதே என்ன கொடுமை.

பாராளுமன்றப் பதவிக்காக இப்படியயாரு ஏமாற்றுத்துரோகமா? இப்படியயாரு பதவியைப் பெற்று இந்த மண்ணில் எதைத்தான் சாதிக்கப் போகின்றீர்கள்.
கடந்த காலங்களில் தயாரித்த தேர்தல் விஞ்ஞாபனத்தை அடியோடு மறந்துபோவது தான் எங்கள் அரசியல் வரலாறு.

நிலைமை இதுவாக இருக்கையில், தேர் தல் விஞ்ஞாபனம் கண்டு தென்பகுதி விரண்டு போவதாகவும் பயந்து ஓடப்போவதாகவும் கூறுகின்ற உசுப்பேத்தல்கள் இன்னும் தேவையா?

அன்புக்குரிய தமிழ் அரசியல்வாதிகளே! தமிழ் இனத்துக்காக உயிரிழந்த எம் உறவுகளின் பெயரால் கேட்கிறோம். உங்களுக்கப் பாராளுமன்றப் பதவி தேவை என்றால் எடுத்துச் செல்லுங்கள். அது பற்றிக் கவலையில்லை.

ஆனால் எங்கள் மக்களை இன்னும் ஏமாற்றாதீர்கள். அவர்கள் பேரினவாதத்தால் நொந்து போயுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link