Type to search

Editorial

ஆளுந்தரப்பில் சேர்ந்தால் அடங்கி இருப்பதுதான் விதியா?

Share

ராஜபக்­க்களின் அரசாங்கத்தில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் இடம்பெற் றுள்ளனர்.

எனினும் அவர்கள் அரசாங்கம் செய் கின்ற அத்தனை விடயங்களையும் ஆதரிப்ப வர்களாக இருப்பதனால், அவர்களால் தமிழ் மக்களின் உரிமை விடயத்தில் எதுவும் செய்ய முடியாமல் போகிறது.

குறிப்பாகத் தமிழர் தாயகத்தில் நடக்கின்ற நில ஆக்கிரமிப்புகள் மற்றும் இராணுவப் பிர சன்னம் என்பன தொடர்பில் அரச பக்கத்தில் உள்ள தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்திறக்காமல் மெளனிகளாக இருக் கின்றனர்.

தமிழர் தாயகத்தில் நடக்கின்ற விடயங்களைப் பாராளுமன்றத்தில் எடுத்துக் கூறினால், அஃது தங்களை அரச எதிர்ப்பாளர் களாகக் காட்டிவிடும் என்ற பயத்தில் இவர்கள் எப்போதும் மெளனிகளாகவே இருக்கின்றனர்.

இப்போது கூட தியாகி திலீபனின் நினை வேந்தல் குறித்த விவகாரங்கள் பேசுபடு பொருளாகியுள்ளன.

இது விடயத்தில் அரச தரப்பில் இருக்கக் கூடிய தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்து நினைவு கூருவதன் அவசியத்தை எடுத்துரைத்திருக்க வேண்டும்.

இங்கு நினைவுகூருதல் என்பது தியாகி திலீபனை நினைவுகூருவது மட்டுமல்ல. மாறாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், மாவீரர் நாள் என நினைவுகூரல் நீண்டு செல்கிறது.
இந் நினைவுகூரல் என்பது தமிழ் மக்களின் உரிமை.

பொதுவில் இறந்தவர்களை நினைவு கூருவதென்பது மனிதர்களின் அடிப்படை உரிமையாகும்.

எனவே இந்த அடிப்படை உரிமையை தமிழ் மக்களுக்கு மட்டும் மறுதலிக்காமல், அதனை வழங்க வேண்டும் என்பதை அரசாங்கத் துக்குத் தெரிவிப்பது ஆளுந் தரப்பிலுள்ள தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலையாய கடமை.

எனினும் அவர்கள் அதனைச் செய்வதாகத் தெரியவில்லை.

அவர்களைப் பொறுத்தவரை அரச தரப்பில் இருப்பதாயின் வாய்பொத்தி மெளனி களாக இருப்பதுதான் தங்கள் பணி என்று நினைக்கின்றனர்.

ஆனால் இதேநிலைமை முஸ்லிம் மக்களுக்கு ஏற்படுமாயின் ஆளுந்தரப்பில் இருந் தாலும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் கள் தங்கள் உரிமையை உரக்கக் கூறுவர்.

அதுவும் முடியாது போகின், அனைவரும் ஒற்றுமைப்பட்டு தங்களின் எதிர்ப்பைக் காட்டு வர்.

ஆனால் நம்மவர்களிடம் அந்த நிலைமை இல்லாமல் இருப்பதுதான் மிகப்பெரும் துர திர்ஷ்டம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link