Type to search

Editorial

அரச நிறுவனங்கள் தமது பணி யை விரைவுபடுத்த வேண்டும்

Share

அரச நிறுவனங்களின் செயலொழுங்கும் மக்களுக்கான அவற்றின் பணிகளும் இன்ன மும் மந்தமும் காலதாமதமும் உடையதாகவே இருந்து வருகிறது.

அரச நிறுவனங்களின் நுழைவாயில் களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நோக்கக் கூற்று, பணிக்கூற்று என்பவற்றைப் பார்க்கும் போது மாலை ஆறு மணிக்கு முற்பட்ட ஆட்டோ சாரதி வடிவேலு போல இருக்கும்.

அந்தளவுக்கு பண்பு, பணிவு, விரைவு என்பன வார்த்தைகளில் விஞ்சி நிற்கும். ஆனால் ஒரு வேலையைப் பெறுவதற்குச் சென்றால்தான் அங்கிருக்கக்கூடிய நடை முறைப் பிரச்சினைகள் தெரியவரும்.

எந்தப் பணியையும் உரிய நேரத்தில் செய்து முடிக்க முடியாத அளவிலேயே நிலைமை உள்ளது.

சுருங்கக்கூறின் மாலை ஆறு மணிக்குப் பின்பான ஆட்டோ சாரதி வடிவேலுவின் நிலைமை போல இருக்கும் எனலாம்.

இவ்வாறாக அரச பணிகள் தாமதமும் சிக்கல்களும் நிறைந்திருப்பதனால், பொது மக்கள் பல மணிநேரங்களை அரச அலு வலகங்களில் காத்திருப்புக்காகச் செலவிடு கின்றனர்.
இந்த நிலைமை எங்கும் எதிலும் என்றாகி விடும்போது, பொதுமக்களின் வேலைகள் பாதிக்கப்படுகின்ற துரதிர்ஷ்டம் ஏற்படுகிறது.

எனவே பொதுமக்களுக்காக இயங்கு கின்ற அரச அலுவலகங்கள் மக்கள் பணியை விரைவுபடுத்த வேண்டும்.

இதற்கான செயற்றிட்டங்களை வகுப்பது சம்பந்தப்பட்ட அரச நிறுவனத் தலைவர்களின் கடமையாக இருக்கும்.

உதாரணத்துக்கு நெல் விதைப்புக் காலம் தொடங்கியதும் உரமானியம் வழங்குகின்ற வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும்.

உரமானியத்தைப் பெறுவதற்காகப் பல மணி நேரம் விவசாயிகள் காத்திருக்கின்ற அவல நிலை ஏற்படவே செய்யும்.

பயிர்செய் காலங்களில் விவசாயிகளுக்கு நேரம் என்பதே கிடையாது.
இந்நிலையில் உரமானியம் பெறுவதற்கு பல மணிநேரத்தைக் காத்திருப்புக்காகச் செலவிடுவது மற்றும் அலைவது என்பன வெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும்.

இங்கு தவிர்த்தல் என்பது எங்ஙனம் சாத் தியமாகுமென ஆராய்ந்தால், நெல் விதைப் புக்கு முன்பாகவே உரமானியத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாகும்.

இங்கு மானிய உரத்தை முன்கூட்டியே வழங்குவது தொடர்பில் மத்திய அரசின் ஒத்துழைப்புத் தேவைப்படும் என்பதால், நம் மக்கள் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட அமைச் சுக்களுக்கு நிலைமையை எடுத்துக்கூறி உர மானியம் முன்கூட்டியே கிடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்யும்போது விவசாயிகளின் நேரம் வீணடிக்கப்படமாட்டாது என்பதுடன் உரியநேரத்தில் உரப் பசளையை வயலுக்கு இடவும் முடியும்.

இதுபோலவே ஏனைய விடயங்களையும் நாம் சிந்தித்துச் செயலாற்றினால் எமது முயற்சிக்கான விளைச்சல் நிச்சயம் கிடைக்கப் பெறும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link