Type to search

Editorial

அரசியல் சார்ந்த தமிழின ஒற்றுமை சாத்தியமானதா?

Share

பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் தனது கன்னியுரையின் போது இலங்கை மண்ணின் ஆதிக்குடிகளின் மொழி தமிழ் என்பதை மிகத் தெளிவாக – துணிச்சலோடு கூறியதனூடு சிங்கள மக்கள் இலங்கை வரலாற்றை அறிய அரியதொரு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

தவிர, நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனைக் கடுமையாக எதிர்த்தவர்களும் அவரின் கன் னியுரை கண்டு அதிர்ந்துள்ளனர்.

அந்த அதிர்ச்சிக்கு தமது எதிர்வினை வெளிப்பாட்டைக் காட்ட முடியாத சூழ்நிலையில், நீதியரசர் விக்னேஸ்வரன் பாராளுமன்றம் சென்றது தமிழர்களுக்கு நல்லது என்று அவர்கள் நினைக்குமளவுக்கு நிலைமை மாறியுள்ளது.

அந்தவகையில் நீதியரசரின் பாராளுமன்ற உரைகள் இன்னும் பல உண்மைகளை வெளிப்படுத்தும்.

இந்த உண்மைகள் சிங்களப் பேரினவாதிகளுக்கு கசப்பாக இருந்தாலும் சிங்கள மக்களும் அவர்கள் தரப்பில் இருக்கக்கூடிய நடுநிலையான வரலாற்று ஆசிரியர்களும் உண்மையை ஏற்றுக் கொள்வர் என நம்பலாம்.

இவை ஒருபுறமிருக்க, நம் கவலையயல்லாம் தமிழ் இனத்தின் ஒற்றுமை பற்றியது தான்.

நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பாராளுமன்றம் சென்றதன் காரணமாகச் சிங்களப் பேரின வாதிகளின் முகம் கறுத்துவிட்டது.

காரணம் இவர்கள் இருவரும் ஒற்றுமையாக, ஒரே கொள்கையில் தமிழ் மக்களின் நிலைப்பாட்டை தெரிவிப்பதோடு அதில் உறுதி யாகவும் இருப்பர்.
இஃது சிங்களத் தரப்புக்கு அவ்வளவு ஆரோக்கியமல்ல என்று பேரினவாதிகள் எண்ணுகின்றனர்.

அவர்கள் நினைப்பது சரியாயினும் இரு வரும் ஒற்றுமையாக… என்ற அவர்களின் நினைப்பு யதார்த்தத்துக்குப் பொருந்துமா என்பதுதான் இங்கு கேள்வி.
விகிதாசாரப் பிரதிநிதித்துவம் வந்துவிட்ட பின்னர் நேர்மைக்கும் அறிவாற்றலுக்கும் இடமில்லை என்றாயிற்று.

என்னைவிட அறிவாற்றல் உடையவனைத் தேர்தலில் நிறுத்தினால், அவர் வென்று நான் தோற்றுவிடலாம் என்று நினைக்கின்ற கள நிலைமையில்; வெறும் குற்றச்சாட்டுக்களின் அடுக்குகளில் ஏறி நின்று அரசியல் நடத்துகின்ற சமகால சூழ்நிலையில், தமிழ் இனத்தின் ஒற்றுமை என்பது அரசியல் சார்ந்து சாத்தியப்படுமா? என்றால், அதற்கான விடையை ஆம் என்று அவசரமாகக் கூறிவிட முடியாது என்பதே உண்மை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link